book

ராசாத்தியும் ஒரு பக்கிரியும்

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தாமரை செந்தூர் பாண்டி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :71
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123433097
Add to Cart

'நலிந்தவர்க்கும், நல்லவர்க்கும் நாளுமில்ல கிழமையுமில்ல'ன்னு சொல்லுவாங்க. இது வெறும் பழமொழியா மட்டுமில்லாம, அந்தக்கால நடப்பே அதுவாத்தான் இருந்தது. பஞ்சமும், பசியுமா கெடந்த காலத்தில, யாரு நாளயும், நட்சத்திரத்தையும் பாத்தது... வயித்த கழுவ வழியுண்டான்னு அவனவன் தன் பாட்டக் கழிக்கறதுக்கு தான் போராடினான்.அதோ போறாளே ராசாத்தி... அவளுக்கு கோவிலும், கொளமும் உசிரு; நெற்றி நிறைய திருநீரும், குங்குமுமாத்தான் அலையறா. ஆனா, இவ, எந்த வகையில சேத்தின்னுதான் தெரியல. கல்யாணங் கெட்டிக் குடுத்தாக... நல்ல எடம்; வீடு, வாசல் எல்லாமே ஓகோன்னுதான் இவ போன எடத்தில அமஞ்சிருந்தது. ஆனா, வாழ்க்கை தான் நல்லா அமையாமப் போயிருச்சு.
கல்யாணம் முடிஞ்ச ஆறாவது மாசமே பொறந்த வீட்டுக்குத் திரும்பி வந்துட்டா. என்ன காரணம்ன்னு யாருக்கும் தெரியல; புருஷங்காரனும் இவளத் தேடி வரவுமில்ல; பஞ்சாயத்து பண்ணவுமில்ல. அவன் அங்க, இவ இங்கன்னு ஆகி, ஏழெட்டு வருஷமாயாச்சு. மக வாழ்க்கைய நெனச்சு நெனச்சே அப்பன்காரனும் ஆண்டவன் காலடிக்குப் போயாச்சு; அவ, அம்மாவும் படுத்த படுக்கையாச்சு. இவ, எதப் பத்தியும் கவலப்படாம கோவில், கொளம்ன்னு அலையுறா. நெத்தியெல்லாம் சந்தனம், குங்குமம், திருநீருன்னு செறப்பா வெளியில வந்த ராசாத்தி, சாமிக்கு அர்ச்சன பண்ணுன சர்க்கரப் பொங்கல், தேங்காப் பழம்ன்னு எல்லாத்தையும் கொண்டு வந்து பக்கிரி முன், பய பக்தியோட வைச்சா... அவள, கோபத்தோட மொறச்சுப் பார்த்த பக்கரி, ''கும்பி கொதிச்சுப் போயி பெத்தவ செத்துகிட்டிருக்கறா... ஒனக்குக் கும்பாபிஷேகம் பாக்கற பவுசா... பெத்தவளப் பாக்காம கோவிலுக்கு வந்துருன்னு சாமி கூப்பிட்டுச்சா... போ போ... இங்கன வராதே,'' என்றார்.
அவர் கோபப்பட்டு பேசியத அன்னிக்குத்தான் பாத்தேன். ராசாத்தி அழுதுகிட்டே ஓட்டமும், நடையுமா வீட்டை நோக்கிப் போனா... அப்பத்தான், இவரு பக்கிரியில்ல; சித்தர்ன்னு தெரிஞ்சுகிட்டேன்.