book

பாலற்ற பெண்பால் (பெண்பால் நபும்சகம்)

₹350+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ராஜ்கௌதமன், ஜெர்மெய்ன் கிரீர்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :372
பதிப்பு :1
Published on :2020
ISBN :9789388973908
Add to Cart

பெண் விடுதலைக்குரிய மாற்றுச் சிந்தனை முறைகளில் ஒன்றாகக் கருதப்படும் 'பாலற்ற பெண்பால்' (The Female Eunuch) என்ற இரண்டாம் அலைப் பெண்னிய நூலின் சுதந்திரமான தமிழ் மொழிபெயர்ப்பாக இது வடிவமைக்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் Eunuch என்ற சொல் அக்கால அரண்மனை அந்தப்புரங்களில் பண்ணை மகளிர்க்குக் காவலாளியாக வைக்கப்பட்ட செயற்கையாக அலியாக்கப்பட்ட ஆணைக் குறிக்கும். வட மொழியில் இதனை நபும்சகம் என்பர். தந்தைவழிச் சமூகத்தில் பெண் தனது இயல்பான பால் வாழ்வைத் தற்சுதந்திரமாக வாழ இயலாதவாறு ஆண்பாலின் நுகர்வுக்கு ஏற்றவாறு பெண்பால் நபும்சகமாக ஆக்கப் பட்டிருக்கிறாள், பாலற்ற பெண்பாலாகக் காயடிக்கப்பட்டிருக்கிறாள் என்பதைக் குறிப்பதாக 'The Female Eunuch' பெயர் சூட்டப்பட்டுள்ளது. இரண்டாம் அலைப் பெண்ணியத்தின் பல்வேறு கோட்பாடுகளை முன்வைத்த படைப்புகளைப் போல இந்நூல் இல்லாமல் ஆண், பெண் பால்களின் மலட்டுத்தனம், காயடிப்பு. நபும்சகம் ஆகிய சிதைவுகளை வலியுறுத்திக் கூறுகிறது.