book

சமையலறைக் கலயங்கள்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுப்ரபாரதிமணியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :140
பதிப்பு :1
Published on :2014
ISBN :9788123427096
Add to Cart

கோவை பூசாகோ கலை அறிவியல் கல்லூரியின் "புது வெள்ளம்" என்ற மாணவர் இதழின் ஆசிரியர் குழுவில் இருந்தேன். மாணவர்களின் படைப்புகளைப் படிப்பது, தேர்வு செய்வது செந்தமிழ் அச்சகத்திற்கு அலைவது என்று முதுகலை கணிதம் படிப்பின் "டென்சனுக்கிடையில் சுகமான அனுபவமாகவே இருந்தது. சொந்த ஊரான திருப்பூரில் பள்ளி நண்பர்களுடன் சேர்ந்து 'குறிஞ்சி' என்ற கையெழுத்திதழை நடத்தி வந்ததில் பல படைப்புகளை (கவிதைகள், கதைகள்) எழுதி இருந்தாலும் "சுதந்திர வீதிகள்" தான் எனது முதல் அச்சில் வரும் படைப்பாக இருந்தது. திருப்பூர் கிருஷ்ணன் நடத்தி வந்த தீபம் வாசகர் வட்டக் கூட்டங்களில் படைப்புகள் வாசிப்பதும் இலக்கியம் சார்ந்த விபரங்களும் படித்து முடித்தபின் வேலையில்லாதப் பருவத்தில் ஆறுதலாக இருந்தது. அதே சமயம் கணிதம் மனசிலிருந்து கை நழுவிக் கொண்டிருந்தது. இலக்கியம் வெகு நெருக்கமாகியிருந்தது. தீபம், தாமரை, கணையாழி போன்ற பத்திரிகைகளில் கவிதைகள், சிறுகதைகள் வெளிவரத் துவங்கியிருந்தன. நெசவாளர் குடும்பத்திலிருந்து வந்தவனுக்கு சற்றே ஆறுதல் என்றிருந்தது.
தொலைபேசித் தொடர்பு உத்யோகம் காரணமாக ஹைதராபாத்திற்கு சென்றேன். புது மொழி, சற்றே வித்யாசமான புது கலாச்சார சூழல். அந்நியமாகவே உணர்ந்தேன். தொடர்ந்து தமிழ்நாட்டிலிருந்து வரும் இலக்கிய இதழ்கள், வெகுஜன இதழ்களுடன் பரிச்சயம் இருந்தது. சிறுகதைகள் நிறைய எழுதினேன்.