book

மீரா கவிதைகள்

₹600
எழுத்தாளர் :முனைவர் யா. சாம்ராஜ்
பதிப்பகம் :சீதை பதிப்பகம்
Publisher :Seethai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :651
பதிப்பு :1
Published on :2019
ISBN :97899389707229
Add to Cart

அன்னைத் தமிழுக்கு அழகு சேர்த்த ஈரெழுத்துக் கவிதை, கவிஞர் மீரா. மகா கவியைத் தெய்வமாய் பாவேந்தரைக் குருவாய்த் தனது குருதியில் ஓடவிட்டுக் கவிதை வெள்ளாமை செய்த வித்தகர். ஈரோடு கண்டெடுத்த தங்கம், காஞ்சி கற்கண்டு, திருக்குவளை தந்த  தேவர்மகன் வழி பகுத்தறிவைத் தேவைக்கதிகமாய்த் தன் தேகங்களில் தேக்கிக் கொண்டவர்.

செம்மண் பூமியில் ( சிவகங்கை, பாசக்காரமண்) கவிதைச் சிம்மாசனம் அமைத்து சமூகத்தைச் சிக்கெடுத்தவர். தான் இறக்கும் கடைசிப் பொழுதில் கூட படைத்தவனைப் பகராமல், பகுத்தறிவாளனைப் ( பெரியார் விருது) பக்கத்தில் வைத்திருந்தவர். பாட்டாளி படும் பாடுகளை வழி நோக வெந்து பொதுவுடைமை ஏற்று புயலாய் புழுதி கிளப்பியவர். குட்டுவதற்கு அதிவீரராம பாண்டியன், செவியை அறுப்பதற்கு வில்லிப்புத்தூரான், தலையை வெட்டுவதற்கு ஒட்டக்கூத்தன் இம்மூன்றாட்களையும் ஒருவராக்கி கவிதைச் சாட்டை சுழற்றியவர்.