book

விடியலைத் தேடும் விழிகள்

₹22+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :த. அருள்நாதன்
பதிப்பகம் :திருமகள் நிலையம்
Publisher :Thirumagal Nilayam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :64
பதிப்பு :1
Published on :2010
Add to Cart


எந்த ஒரு உயிருக்கும், பொருளுக்கும் 'கரு' ஒரு பிரதானமாக அமைகிறது.
இந்தக் கருவைக் கொண்டுதான் கதைகளும் கவிதைகளும், காவியங்களும் உரு கொள்கின்றன.
மறுதலிக்கப்பட்ட மானுட வாழ்க்கையின் சாரம்தான், என் எழுதுகோல் மகனின் உயிர் “மை”யின் சமனம் புத்தகப் பெண்ணின் தாள் வயிற்றில் கருவாகிறது.
கடலை கடக்கும் பறவைகள் கரையை அடையும் முயற்சியின் - வேதனையின் விளிம்பில் அவை அடையும் உடலின் ரணத்தையும், உள்ளத்து உருக்கத்தையும் பதிவு செய்யவே என் எழுதுகோல் பாய்மரமாகிறது.
வெயிலில், சுடும் மணலில் இந்த மண் புழுக்கள் படும் வேதனையைதான் விவரிக்கிறேன்.
கானங்கள் பாடும் கவிதைகளை விட கவலைகள் கூறும் கவிதைகளை நான் நேசிக்கிறேன்.
உங்கள், விழி வழி என் எண்ண த்தையும், ஏக்கக் கனவுகளையும் இறக்கி வைக்கிறேன்.
சுமை சுமக்கும் தோள்களின் சோர்வுக்கும்; கதிர் அறுக்கும் கரங்களின் ரணங்களுக்கும் சில ஒப்பாரிக் கவிதைகள் ஒத்தடம் இடுமா? நம்பிக்கையில் நான்.
-த. அருள் நாதன்