ஒருத்தி கவிதைகளுக்கும் இரவுகளுக்கும் திரும்புகிற பொழுது
₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பொன்முகலி
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :112
பதிப்பு :1
Published on :2021
ISBN :9789355230171
Add to Cartஅன்றாட வாழ்வை சிக்கலுக்கு உள்ளாக்கும் அபத்தங்கள் அனைத்தையும் தவிடுபொடியாக்கும் ஆவேசம், அவற்றிலிருந்து தப்ப முடியாமையின் பரிதவிப்பு, தனக்கான பாதையைத் தானே உருவாக்கிக்கொள்ளும் முனைப்பு, பாசாங்குகளின் மீதான நகைப்பு, அன்பின் தழும்பல்கள், உவகையின் பிதற்றல்கள், நிறைவின் மௌனம் என யாவற்றையும் கொண்டவை இக்கவிதைகள். சுடரின் அசைவைப்போல நளினமும் ஒளியும் ஒருசேர நிகழும் அபூர்வ கணங்களையும் கொண்டவை. எளிய சொற்களைச் சோழிகளாக்கிச் சுழற்றி வீச அவை நவமணிகளாகும் ஜாலத்தை பொன்முகலியின் மொழியில் காணமுடிகிறது