book

தமிழகம் தந்த மாணிக்கம் காமராஜ்

₹99₹110 (10% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ப. வேணுகோபால்
பதிப்பகம் :அமராவதி பதிப்பகம்
Publisher :Amaravathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

காமராஜர் என்றாலே எல்லோரும் கூறுவது கல்விக் கண் திறந்த ஏழைப் பங்காளன் என்ற சொல்லைத்தான் கேட்டிருக்கிறோம். ஏழைக் குழந்தைகளை படி என்று சொன்னவர், வெறும் வயிற்றில் படிக்க முடியாது என்பதற்காக மதிய உணவு திட்டத்தோடு அனைத்து குழந்தைகளுக்கும் சீருடை வழங்கி மாணவர்கள், மாணவிகள் கல்வி கற்க இடையூறு இல்லாமல், வழி வகுத்தார் என்ற பெருமைக் குறியவர் நமது காமராஜர். இந்தியா ஒரு விவசாய நாடு, விவசாயத்துக்கு தண்ணீர் அவசியம் என்பதை உணர்ந்த அவர் அவரது ஆட்சிக்காலத்தில் கட்டிய அணைகள் ஏராளம். உணவுக்கு வழி வகுத்துத் தந்தவர், அன்னிய இறக்குமதி பொருட்களை புறக்கணிக்கும் வகையில் பல தொழிற் பேட்டைகளை உருவாக்கி, பல இலட்சக் கணக்கான படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு அளித்தார். எந்தக் காரியத்தையும் உடனே செய்ய வேண்டும் என்ற துடிப்பு அவரிடம் இயற்கையிலேயே இருந்ததால் அவரது ஒன்பது ஆண்டு ஆட்சிக் காலத்தில் தெண்ணூறு ஆண்டுகால சாதனையைச் செய்து முடித்தார். எவரது மனதையும் புண்படாத வகையில் பேசும் அவர் முடியாது என்று தெரிந்தாலும் கூட 'ஆகட்டும் பார்க்கலாம்' என்ற வார்த்தை மூலம் நெகிழ வைத்தார். அவரது ஆட்சி தமிழகத்தின் பொற்கால ஆட்சி. அவரது சரித்திரம் அனைவரும் படிக்க வேண்டிய ஒன்று.