book

டாக்டர் இராசேந்திர பிரசாத்

₹120+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :அ. செல்வமணி
பதிப்பகம் :ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
Publisher :Sri Indu Publications
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :240
பதிப்பு :1
Published on :2014
Add to Cart

டாக்டர் இராஜேந்திரப் பிரசாத் இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவர் ஆவார். இந்திய காங்கிரஸ் கட்சித் தலைவர்களுள் ஒருவரும், விடுதலைப் போராட்ட வீரருமான இவர் 1950 முதல் 1962 வரை இந்திய குடியரசுத் தலைவராக இருந்தார். இவரே இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் ஆவார். இவர் 1884ம் ஆண்டு டிசம்பர் 3ம் தேதி பீகாரின் சிவான் மாவட்டத்தில் உள்ள ஜெராடை என்னும் இடத்தில் பிறந்தார். இவருடைய தந்தை பெயர் மகாவீர சாகி, தாயார் பெயர் கமலேஸ்வரி தேவி ஆகும். இவருடைய தந்தை பெர்சிய மொழியிலும் சமஸ்கிருத மொழியிலும் தேர்ச்சி பெற்றவர். தாயார் மிகுந்த சமயப் பற்றுள்ளவர். சிறு வயதில் தன் குடும்பத்தாராலும் நண்பர்களாலும் ‘ராஜன்’ என அழைக்கப்பட்டார்.