book

எத்தனையோ பொய்கள்

₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வித்யாசாகர்
பதிப்பகம் :Others
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :120
பதிப்பு :1
Published on :2010
குறிச்சொற்கள் :கற்பனை, சிந்தனை, கனவு, காதல், வித்யா சாகர்
Add to Cart

பெரு மதிப்பிற்குரிய, மனதைக் கவரும் கவிஞரும், எழுச்சி எழுத்தாளரும், கண்ணில் பட்டதை மனதால் ஈர்த்து யதார்த்தத்தில் கொண்டுவரும் ஓவியருமான வித்யாசாகர் அவர்களுக்கு ஒரு புதிய வெற்றி இந்த 'எத்தனையோ பொய்கள்'.  எல்லோரும் கண்டிப்பாக படிக்க வேண்டிய கவிதைகளை இத்தொகுப்பில் தந்திருக்கிறார் ஆசிரியர்.  எந்த வளர்ச்சி பற்றியும் எண்ணாது, வாழ்வின் குறைந்தபட்ச லட்சியங்களுமின்றி  வாழும் இச்சமூகத்தின் அவலங்களுக்கு மத்தியில் சிதறிகிடக்கும் விஷயங்களை ஒன்று கோர்த்து ஒரு தொகுப்பாகக் கொடுத்திருக்கிறார் நம் வித்யாசாகர். இந்த புத்தகத்தில் இருப்பது அத்தனையுமே முத்தான முத்துக்கள்தான்.

உண்மையில் எல்லா கவிதைகளுமே என்னை மிகவும் கவர்ந்தன.  பாதித்தன.  கண்டிப்பாக படிக்க போகும் உங்களையும் கூட தொட்டு கீறி தழுவி ஏதேனும் செய்யும்.  இக்கவிதைகளின் ஆழம் உணர்தலில் நல்ல சிந்தனைகளை உங்குக்குள்ளும் மலர்விக்கும். இதில் எள்ளவும் ஐயமில்லை.

அன்னையின் ஆசியோடு
கவிஞர் வித்யாகரன்
கூடுதல் எந்திரப்பொறியாளர்
சிங்கப்பூர்.