book

காற்றின் சிறகொடித்த பறவை

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செங்காந்தள் வீரராகவன்
பதிப்பகம் :நூலேணி
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
Published on :2024
ISBN :9788119957958
Add to Cart

1984ஆம் ஆண்டு வெளிவந்த 'புள்ளிப்பூக்கள்' என்கிற தமிழின் முதல் ஐக்கூ தொகுப்பில் வெளியான என் கவிதையை இன்று வரை கல்லூரி, பல்கலைக்கழகங்கள், இலக்கியக் கூட்டங்கள் என அனைத்து இடங்களிலும் எடுத்துக்காட்டாகச் சொல்லி வருகிறார்கள். இது எனக்குக் கிடைத்த பெருமையன்று: தமிழுக்குக் கிடைத்த பெருமை. ஐக்கூவுக்கு கிடைத்த பெருமை. இதோ முதல் நூல்கள் வெளியாகி நாற்பதாண்டு ஆகிறது என்கிற செய்தியே மகிழ்வளிக்கிறது. இந்தக் கொண்டாட்டத்தைச் சென்னை நூலேணி பதிப்பகம். புதுச்சேரி மழை துளிப்பா (ஹைக்கூ) வரலாற்று ஆவண இதழும் இணைந்து கொண்டாடத் தயாராகிவிட்டனர். வெறும் கொண்டாட்டமன்று உலகத் துளிப்பா (ஹைக்கூ) மாநாடாக உருவெடுத்துள்ளது. இந்த மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சார்ந்த நாற்பதற்கும் மேற்பட்ட தனிநபர் படைப்புகள் நூலாக வெளியிடுவது ஐக்கூவில் புதிய முயற்சி. ஏற்பாட்டாளர்களான பாவலர் புதுவைத் தமிழ்நெஞ்சன் -கள்ளிக்கோவில் இராஜா மற்றும் குழு நண்பர்களுக்கு அனைவரின் சார்பிலும் என் சிறப்பு வாழ்த்துகள். இதோ 'காற்றின் சிறகொடித்த பறவை' என்னும் தலைப்போடு ஐக்கூக்கள் எழுதியுள்ள கவிஞர் செங்காந்தள் வீரராகவன் அவர்களுக்கு என் இனிய பாராட்டுகள்.