book

பூரண மதுவிலக்கை வலியுறுத்தி தமிழக மக்களிடம் ஒரு கோடி கையெழுத்து

₹0+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காந்திய மக்கள் இயக்கம்
பதிப்பகம் :Others
புத்தக வகை :பொது
பக்கங்கள் :40
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

 

சென்னை, ஜூன் 27: காந்திய மக்கள் இயக்கம் சார்பில் பூரண மதுவிலக்கு கோரி கோடி கையெழுத்து இயக்கம் அக்டோபர் 2-ம் தேதி வரை நடைபெறுகிறது. இதனை சென்னை பெரியமேட்டில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முதல் கையெழுத்திட்டு தொடங்கி வைத்தார். 

இந்திய கம்யூனிஸ்ட் மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு, தமிழர் வாழ்வுரிமை கட்சி நிறுவனர் பண்ருட்டி வேல்முருகன், கட்சியின் தலைவர் தீரன், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் ஹைதர் அலி ஆகியோர் கையெழுத்திட்டனர்.

 

மது விலக்கு - ஏன் ? ? ? எதற்காக ? ? ? ? ?

 

மதுரையில் ஸ்கூல் பெஞ்சை தூக்கிச் சென்று விற்று 'தண்ணி' அடித்த மாணவர்கள்!

 

மதுரை: மதுரையில் பள்ளியில் இருந்த பெஞ்சை திருடி விற்று டாஸ்மாக் கடையில் மாணவர்கள் மது அருந்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மதுரை மாவட்டம் வாடிப்பட்டியில் உள்ள அரசு மேல் நிலைப்பள்ளி மாணவர்கள் 5 பேருக்கு குடிப்பழக்கம் உள்ளது. ஒரு நாள் அவர்களுக்கு மது அருந்த பணம் இல்லை. வீட்டிலும் கேட்க முடியாது. அதனால் பணத்திற்கு என்ன செய்யலாம் என்று யோசித்துள்ளனர். உடனே அவர்களின் நினைவுக்கு வந்தது பள்ளிக்கூட பெஞ்ச் தான். அன்றைய தினம் பள்ளி முடிந்து மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு சென்ற பிறகு அந்த 5 பேரும் சேர்ந்து ஒரு பெஞ்சை பல துண்டுகளாக்கினர்.

அந்த துண்டுகளை எடுத்துச் சென்று அருகில் உள்ள மரக்கடையில் கொடுத்து பணம் பெற்றனர். பணம் கிடைத்தவுடன் நேராக டாஸ்மாக் கடைக்கு சென்று மது வாங்கி குடித்து மகிழ்ந்தனர். இந்த சம்பவம் குறித்து தெரிய வந்த தலைமை ஆசிரியரும், ஆசிரியர்களும் நொந்து கொண்டனர்.

 

மது விலக்கு - ஏன் ? ? ? எதற்காக ? ? ? ? ?

நன்றி : http://www.facebook.com/thilagab

இன்று என்னுடைய பிறந்த நாள்...............

ஒரு புறம் சந்தோசம் மறு புறம் துக்கம்........

இன்று மாலை நான்கு மணியளவில் நான் கேள்விப்பட்ட ஒரு செய்தி என்னுடன் பள்ளியில் பயின்ற என் நண்பன் ரமேஷ் மரணமடைந்தான் என்பது...............

அவன் இறுதி யாத்திரைக்கு சென்று விட்டு வந்து குளித்தவுடன் இப்பதிவை பதிகிறேன்........

அவனுக்கு என் வயது தான் ( 36)...............

அவன் மனைவியின் வயது (31)............

அவனுக்கு இரண்டு குழந்தைகள் இரண்டும் பெண்கள் முறையே 11 மற்றும் 8.........

பள்ளியில் பயிலும் போது எல்லாவற்றிலும் முதல் மாணவன் அவன்.......

2000தில் அவன் திருமணத்தின் போது கூட அவன் இப்படி ஆவான் என்று நான் எதிர் பார்த்ததில்லை........

இன்று அவன் மரணத்திற்கு காரணம் குடி.........

நம்பவே முடியவில்லை அவனா இப்படி என்று.......

நண்பர்களே தொடர்ந்து எழுத என் மனதில் தைரியம் இல்லை .........

இது யாருடைய குற்றம் .............

எனக்கு புரியவில்லை.........

அவன் இள வயது மனைவியும் ...அவன் சின்னஞ்சிறு பெண்கள் இருவரும் புரண்டு அழுத போது .............

இந்த பாழாய் போன அரசையும் ....சமுதாயத்தையும் சாடாமல் என்னால் இருக்க முடியவில்லை.......

என்ன தீர்வு.......

இந்த குடி நோயிலிருந்து தமிழகம் தப்புமா?.......

விடை தெரியாமல் கனத்த மனதுடன் இப் பதிவை முடிக்கின்றேன் .......

இதற்கு மேல் எழுத என்னால் முடியவில்லை........
 

மது விலக்கு - ஏன் ? ? ? எதற்காக ? ? ? ? ?

நன்றி : http://www.facebook.com/erodekathir

 

நேற்று இரவு 7.30 மணி இருக்கும். அலுவலக அறையின் வாசலில் அவர் நின்றார்.

“உள்ளே வரலாமா”? என்றார்

”வாங்க” என்று சொல்லிவிட்டு…. பார்த்த உருவமா இருக்கே என நினைவுகளை மீட்டெடுத்தேன்.

... ”யார்னு தெரியுதுங்ளா?” என்றார்

”ம்ம்ம்.. அட தெரியுதுங்க, தெரியாம என்ன” என்றேன்

பெயர் நினைவில் இல்லை. ஒரு சிறிய தொழில் நிறுவனம் நடத்தி வந்தவர். ஈரோட்டின் ஒரு பிரதானச் சாலையில் அவரின் நிறுவனம் இருந்தது. ஓரிருமுறை வேலையாக சென்றிருக்கிறேன், அவரும் வந்து போயிருப்பதாக நினைவு. அவரை 1998, 1999களில் சந்தித்ததாக நினைவு. யோசித்தும் கூட பெயர் நினைவுக்கு வரவில்லை. பெயரைக் கேட்கலாமா வேணாம என மனது ஊசலாடியது.

மெலிதாக தடுமாற்றத்தோடு, மெதுவாக வந்தவர், மப்பில் இருக்கிறாரோ எனத் தோன்றியது. நான் பார்த்த காலத்தில் குடியை வெகுவாக சிலாகித்தவர் என்பதும், எப்போதும் பான்பராக் வாசத்தோடு இருப்பவர் என்பதும் நினைவிற்கு வந்தது.

“உங்ககிட்ட ஒரு உதவி கேட்டு வந்திருக்கிறேன்” என்றார்

என்ன உதவியாக இருக்கும் எனும் சிந்தனையோடு..

“ம்ம்ம். என்னங்க” என்றேன்

“ஒரு நூறு ரூபா பணம் குடுங்க, காலையில 9 மணிக்கு கொண்டு வந்து தந்துடுறேன்”

“ஆஹா… ஏங்க என்னாச்சு…. ஏன் நூறு ரூவாயிக்கு… இவ்ளோ தூரம்” என்றேன்

வெகு வெகு அரிதாக… மிகப் பழகிய நண்பர்கள் எப்போதாவது அவசரமாக வந்து 50 அல்லது 100 குடுங்க வண்டியில் பெட்ரோல் தீர்ந்துடுச்சு என்று கேட்டதுண்டு. அப்போதெல்லாம் ஒரு துளியும் சந்தேகம் வந்ததில்லை. ஆனால் நேற்று சந்தேகம் வலுத்தது.

“இன்னிக்கு எனக்கு பர்த்டேங்க, 100 ரூவா குடுங்க, காலையில சத்தியமா தந்துடுறேன்”

பிறந்தநாள் என்று சொல்லியும் ஏனோ வாழ்த்தத் தோன்றவில்லை எனக்கு, சிந்தனை அவரையும் மதுவையும் குறித்தே உழன்று கொண்டிருந்தது.

“எங்கிருந்து வர்றீங்க, இப்ப?”

“அக்கா வீட்ல இருந்து வர்றேங்க” என ஒரு பகுதியைச் சொன்னார்.

அக்கா வீடு இருப்பதாகச் சொல்லும் பகுதியிலிருந்து, அவர்கள் நிறுவனம் இருந்த பகுதியைவிட என்னைச் சந்திக்க வந்திருப்பது கூடுதல் தொலைவும் கூட.

”சரிங்க…. உங்க கடை அங்கிருந்து பக்கம்தானே, ஏன் இவ்ளோ தூரம்” என கொஞ்சம் ஆச்சரியத்துடன் கேட்டேன்

“இல்லீங்க…. சரிங்க…. 50 ரூபா குடுங்க போதும், காலையில் தந்துடுறேன்”

“பணம் இல்லைங்ளே… இப்பத்தானே ஒருத்தருக்கு கொடுத்து அனுப்பினேன்” என்று சமாளித்தேன்

“அய்யய்யோ.. உங்கள நம்பித்தான்… இவ்ள தூரம் வந்தேன், எப்படியாச்சும் குடுங்க” என்றார்

“நிஜமா இல்லீங்க, இப்பத்தான் ஒரு பில்லுக்கு சுத்தமா பொறுக்கிக் கொடுத்தேன்”

“இல்லீங்க, நீங்க அப்படிச் சொல்லக்கூடாது, எப்படியாச்சும் குடுங்க” என்றார்

"எப்படி வந்தீங்க… வண்டி இல்லைனா சொல்லுங்க… உங்க கடையில வேணா விடுறேன்” என்றேன்

“சரி… ஒரு 35 ரூபாயாச்சும் குடுங்க… ப்ளீஸ்….”


“நிஜமா இல்லீங்க”

”என் பர்த்டேங்க இன்னிக்கு, உங்களை நம்பித்தான் வந்திருக்கேன் எப்படியாச்சும் குடுங்க:” என அடம்பிடிக்க ஆரம்பித்தார்.

“சரிங்க… 35 ரூபாய வெச்சு, பர்த்டே-க்கு என்ன பண்ணப்போறீங்க” என்றேன்

”அப்பப்ப ஹான்ஸ் போடுவங்க …. ஹான்ஸ் வாங்கக் கூட காசில்ல… நீங்க 35 ரூபா எப்படியாச்சும் குடுங்க” எனத் தொடர்ந்தார்.

அந்த அடம் கொஞ்சம் எரிச்சலை உண்டாக்கியது. இல்லையெனும் மறுப்பைத் தீவிரமாக்கியது.

ஒருவழியாக எழுந்து சென்றார்.

”கொடுத்திருக்கலாமோ?” ”ஏன் கொடுக்க வேண்டும்?” என மனது உழன்று கொண்டேயிருந்தது. பின்னர் மறந்து போனேன்.

காலை அலுவலகத்திற்குள் நுழைந்தவுடன், நேற்று அவர் அமர்ந்திருந்த நாற்காலியைப் பார்த்தவுடன் ”அந்த 35 ரூபாய்” நினைவுக்கு வந்தது.

அந்த நிறுவனத்தோடு தொடர்பிலிருந்த நண்பரை அழைத்து

“இந்த மாதிரி…. ******* ல இருந்து அவர் வந்தார்” என்றவுடன்

“வந்து காசு எதும் கேட்டாரா? பயங்கரமான ட்ரிங்ஸ்ங்க அவரு” என்றார் நண்பர்.

நடந்த கதையைச் சொன்னேன். குடியால் அந்த நிறுவனத்தில் அவர் இல்லையென்றும், வேறு பக்கம் வேலைக்குச் செல்வதாகவும், வேலைக்கும் ஒழுங்காகச் செல்வதில்லையென்றும் நண்பர் தொடர்ந்தார்.

மீறிய குடியின் பொருட்டு வேலை, தொழில் சிதைந்து, குடிப்பதற்காக சிறிய தொகை கேட்டு வரும் ஆட்கள் குறித்துப் பட்டியலிட்டார் நண்பர். இன்னொரு நிறுவனத்தில் பணியாற்றும் நபர், அம்மாவின் மருத்துவச்செலவுக்கு 300 ரூபாய் வேண்டுமெனக் கேட்டு வர, அந்த நிறுனத்தின் உரிமையாளரை இவர் போனில் அழைக்க... அவர் அந்த பணியாளார் ஊர் முழுக்க காசு வாங்கிய கதையைச் சொல்லி எச்சரித்ததையும் கூறினார்.

நான் தெளிந்தேன்.

கிட்டத்தட்ட 13 வருடங்களுக்குப் பிறகு என்னைச் சந்தித்து அவர் பணம் கேட்ட தீவிரம், திடம் குறித்து யோசிக்கையில்…. இது போன்ற தீவிரங்கள், பணத்திற்காக ஒரு குற்றத்தை வெகு எளிதாகச் செய்யக்கூட தயங்காதோ எனவும் தோன்றியது. நேற்று அந்த 35 ரூபாயைப் பெற்றிட வேறு என்ன செய்திருப்பாராக இருக்கும் எனவும் யோசிக்க முயன்றது மனம்.

மீண்டும் குழப்பத்தில் ஆழ்ந்தேன்.
 
மிதமிஞ்சியக் குடியால் வீட்டருகே ஒருவர் மரணமடைந்தார். அவருக்கு மூன்று பிள்ளைகள். மூன்றுக்குமே அரை நிஜார் வயசுதான். மூவருக்குமே தந்தை இறந்துவிட்டார்கள் என்றுகூட தெரியாத வயசு. கையில் பால் புட்டியோடு எல்லாரோடும் சேர்ந்து தேம்பி அழும் கடைசியைப் பார்க்க ரொம்ப கஷ்டமாகயிருந்தது.

வருடத்திற்கு வருடம் விற்பனையில் ஏறுமுகமாக இருக்கும் டாஸ்மாக்கினால் இவ்வளவு கோடி வருமானம் என்று சொல்லி மார்தட்டிக்கொண்டு அந்தக்... காசுதான் மாநிலத்தின் நலத்திட்டங்களுக்குப் பயன்படுகிறது என்று அரசாங்கம் ஆயிரம் சப்பைக்கட்டு கட்டினாலும் அந்தப் பிஞ்சுகளைப் பார்க்கும்போது இப்படி உயிர்ப்பலி வாங்கும் டாஸ்மாக் அவசியமா என்றக் கேள்வி எழாமல் இல்லை.

ஹும். அக்டோபர் 2ம் தேதி பார் வைத்திருப்பவர் பாட்டிலைப் பதுக்கி வைத்து விற்கும் தேசத்தில் எவ்வளவு பிரேதம் விழுந்தால் என்ன?

1888ல் லண்டனில் இருந்து மகாத்மா தனது சகோதரர் லக்ஷ்மிதாஸ் காந்திக்கு எழுதிய லெட்டரிலிருந்து...

The cold here is now bitter but such bad weather generally does not last long. In spite of the cold I have no need of meat or liquor. This fills my heart with joy and thankfulness. I am now keeping very good health.

#கூகிளில் Gandhi complete works என்று தேடினால் வரும் முதல் லிங்க்கில் இருக்கிறது காந்தியின் அனைத்து ஆக்கங்களும்.