book

ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :நம்மாழ்வார்
பதிப்பகம் :இயல்வாகை பதிப்பகம்
Publisher :Iyalvagai Pathippagam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :68
பதிப்பு :2
Published on :2020
Out of Stock
Add to Alert List

ஏன் வேண்டும் இயற்கை உழவாண்மை?இந்த நூல் உங்கள் கைகளில் தவழ்கிறது. எத்தகைய பின்னணியில் இந்நூல் உருவாக்கப்படுகிறது என்று சற்றே பார்ப்பது மிகவும் பொருத்தமாகும். இந்தியா கிராமங்களில் வாழ்கிறது. கிராமங்கள் முன்னேறாமல் இந்தியா முன்னேறிவிட்டது என்று சொல்லிக் கொள்ள முடியாது. உணவை இறக்குமதி செய்ய வேண்டி வந்து விட்டது. பச்சை புரட்சி காலத்தில் நிறைய தானியம் விளைவித்து குவித்த பகுதிகளில் நிலம் களர்தன்மை பெற்று விட்டது. ஒரு தானியம் கூட கூடுதலாக உற்பத்தி செய்வதற்கு வாய்ப்பு இல்லை என்று முன்னால் தேசிய உழவர் கமிஷன் தலைவர் டாக்டர் எம்.எஸ்.சுவாமி நாதன் எழுதியுள்ளார். நாட்டில் உழவு தான் அடிப்படைத் தொழில். உணவு பாதுகாப்பு, உழவர் பாதுகாப்பு இரண்டும் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளது. உழவர் பாதுகாப்பிற்கும் உணவு உற்பத்தி பெருக்கத்திற்கும் மாநிலங்களே திட்டம் தயாரித்து செயல்படுத்துவதே மிக பொருத்த மாக இருக்கும்.