book

வாத்து மற்றும் கூஸ்வாத்து வளர்ப்பு

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சி. பாண்டியன், ந. குமாரவேலு
பதிப்பகம் :ராமையா பதிப்பகம்
Publisher :Ramaiya Pathippagam
புத்தக வகை :விவசாயம்
பக்கங்கள் :88
பதிப்பு :3
Published on :2012
Add to Cart

கூஸ் வாத்துகள் கறிக்காகவும், அழகுக்காகவும் புல் தரைகளை சமமாகப் பராமரிக்கவும், தோட்டங்களில் களைகளை அழிக்கவும் மற்றும் காவலுக் காகவும் வளர்க்கப்படுகின்றன.  இதன் இரைப்பை பசுந் தீவனத்தை நன்கு ஜீரணித்து உட்கிரகிக்கும் திறன் படைத்தது. கூஸ் வாத்துக்கள் வளர்ப்பிற்கு போதுமான அளவு நீர் நிலைகளுடன் கூடிய மேய்ச்சல் நிலம் இருப்பது அவசியம்.  ஒரு ஏக்கர் நிலத்தில் பொதுவாக 15-50 கூஸ் வாத்துக்களை வளர்க்கலாம். ஒரு வாத்து சராசரியாக ஒரு வருடத்திற்கு 150 முட்டைகள் வரை இடும். அதிக குளிர், அதிக வெப்பம் மற்றும் அதிக காற்று ஆகியவற்றிலிருந்து பாதுகாக்க அதிக செலவில்லாமல் கொட்டகை அமைக்க வேண்டும். கூஸ் வாத்துக்களில் 6 இனங்கள் உள்ளன. அவை: டொலூஸ்,எம்டன், சைனீஸ், கனேடியன், ஆப்ரிக்கன் மற்றும் எகிப்தியன் ஆகிய இனங்கள் உள்ளன. ஆண் கூஸ் வாத்துக்கள் சராசரியாக 7 கிலோ உடல் எடையும், பெண் கூஸ் வாத்துக்கள் 6 கிலோ உடல் எடையுடனும் இருக்கும். வாத்துக்களுடன் ஒப்பிடும்போது கூஸ் வாத்து முட்டைகளை நன்கு அடைகாத்து குஞ்சு பொரிக்கும் திறனுடையவை. ஆண் கூஸ் வாத்துக்களின் உடல் அமைப்பு பெண் கூஸ் வாத்துக்களைவிட பெரியதாக இருக்கும்.  பெண் கூஸ் வாத்து கத்தும்போது கரகரப்பான ஒலி உண்டாகும். ஆண் கூஸ் வாத்து கத்தும்போது மெல்லிய ஒலி உண்டாகும்.