நானும் என் கணவரும் (சிறார் படக் கதை)
₹70+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாலை செல்வம்
பதிப்பகம் :இயல்வாகை பதிப்பகம்
Publisher :Iyalvagai Pathippagam
புத்தக வகை :சிறுவர்களுக்காக
பக்கங்கள் :56
பதிப்பு :1
Published on :2019
Add to Cartகுழந்தை
இலக்கியம் என்று சந்தையில் கிடைக்கும் பெரும்பான்மை நூல்கள் பக்தி என்கிற
மேற்பூச்சின் கீழ் வைதீக நஞ்சு பொதிந்தவை. அதற்கு மாற்றான குழந்தை
இலக்கியங்கள் இங்கு வளர வேண்டும். அதிலொரு முயற்சியாக வெளிவந்துள்ளதே
சாவித்ரிபாய் பூலே வாழ்க்கை குறித்த ‘நானும் என் கணவரும்’.
இதைக் குழந்தைகளுக்கான வடிவில் எளிமையாக்கி தந்துள்ளார்
சாலை செல்வம். பக்கத்துக்கு பக்கம் செந்தில் நடராஜன் ஓவியங்களுடன்
முழுவண்ணத்தில் மிளிர்கிறது நூல்.
நூறாண்டுகளுக்கு முன்னர் நிலவிய பெண்களின் நிலைமை மற்றும்
பெண் குழந்தைகளின் கல்வி குறித்தும் அதற்காகப் பாடுப்பட்ட சாவித்திரி
மற்றும் பூலேவின் போராட்டங்கள் குறித்தும் குழந்தைகள் எளிமையாக அறியும்
வண்ணம் எழுதப்பட்டுள்ளது. இதை பெற்றோர்கள் தாங்களும் படித்து
குழந்தைகளையும் படிக்க வைக்க வேண்டும்.
கல்வியைத் தீர்வாக முன்வைத்த அண்ணல் அம்பேத்கரின் நினைவுநாளில் அனைவருக்கும் இந்நூலைப் பரிந்துரைக்கிறேன்.