
கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை
₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :இயற்கை
பதிப்பகம் :உயிர்மை பதிப்பகம்
Publisher :Uyirmmai Pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :88
பதிப்பு :1
ISBN :9789387636569
Out of StockAdd to Alert List
கடைசி தூரதேசப் பறவையிடம் மன்றாடும் நீர்நிலை என்பது தலைப்பு. கவிதைத் தொகுதிக்குத் தலைப்பு இன்னதுதான் என்று வரையறுத்துவிட முடியாது. அது கவிஞனின் அகத்தின் ஏதோவொரு பெட்டகத்தைக் கிழித்துக்கொண்டோ அல்லது வெடித்துச் சிதறியபடியோ உருவாகும். அச்சுக்குப் போகும் வரைக்கும் ஒரு தலைப்பைக் கெட்டியாகப் பற்றிக்கொண்டே எதுவோவொன்று ஒத்துவராமல் அல்லது பூர்த்தியடையாமல் போதாமையின் பெருங்கனத்தை எப்படி மேலாள்வதெனத் தெரியாமல் அந்தரத்தை வெறித்தபடி இருந்துகொண்டிருந்து சட்டென்று இன்னொரு வெளிச்சத்தில் புதிய வேறொரு தலைப்பு புறப்பட்டுக் கிளம்பி வந்து தோள்மேல் அமர்ந்து தன் செம்மூக்கால் சிரிக்கும் கிளி. நீதான் நீயேதான் என்றாகிக் கவிதை புஸ்தகத்தை வெளியிடுவதாவது பேரொளியில் கொண்டுபோய்ச் சிறு சிதறலைச் சேர்ப்பிக்கும் அலாதியான ப்ராசஸ்.யியற்கை கவிதைகள் எழுதித் தானே பெரும்பாலும் வைத்துக் கொள்கிற சமர்த்துப் பிடிவாதம் கொண்டவர். கைப்பொருள் தொலைத்துக் காகிதம் வாங்கி வெயில்நதி என்று பத்திரிகை நடத்திப் பித்ததிகம் கொண்டலைந்த இன்னொரு சிறுபத்திரிகைக் கவிஞன். அவனது கவிதைத் தொகுதியின் தலைப்புத்தான் இந்தப் பத்தியின் முதல் வரி எழுத்தின் வசீகரங்கள் பல. அவற்றில் மகத்தான ஒன்று என இதனைச் சொல்வேன். வாழ்வின் சாரமென்பதே அழிவதுதான். ஆனாலும் பூரணம் எது, பாதி எது என்பதில் தொடங்கிச் சதா அழிவை எண்ணியும் எண்ணாமலும் அதன் திசையிலும் வேறு திசைகளிலும் ஓடிக் கொண்டே இருப்பதாக மனிதன் வாழும் வாழ்வின் அத்தனை நிஜங்களும் பொய்யாகும் ஒற்றைப் புள்ளி மட்டும் நிஜம். எழுத்தின் மூலமாக அழிதலைக் குறித்த முழுமையான தகவல் அறிக்கையைத் தயாரித்து விட முனையும்போது அதன் சேர்மான விலக்கத்தில் எதற்கோ முயலுகையில் வேறேதோ அகப்படுகிறாற் போல வந்து உதிப்பது இலக்கியமாகிறது.
