புலைப்பேடி என்றொரு விசித்திர வழக்கம்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :செந்தீ நடராசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :பொது
பக்கங்கள் :96
பதிப்பு :1
Published on :2012
ISBN :9788123420967
Add to Cartகேரளப் பகுதிகளில் (இன்றைய குமரி மாவட்டம் உட்பட) 250 ஆண்டுகளுக்கு முன்வரை
வழக்கத்தில் இருந்ததாகக் கருதப்படும் புலைப்பேடி' ஒரு விசித்திரமான சமூகப்
பழக்கமாகவும் அவிழ்க்கப்படாத புதிராகவும் விளங்குகிறது.
புலைப்பேடி, மண்ணாப்பேடி (மண்ணாரப்பேடி) என்றும் அறியப்படும். இது வடகேரளப்பகுதிகளில் பறப்பேடி என்றும் வழங்குகிறது. பேடி' என்பதற்குப் பதில் 'பிடி' என்ற வழக்கும் இருக்கிறது. பேடி என்றால் மலையாளத்தில் பயம் என்று பொருள். பிடி என்றால் பிடித்துச் செல்வது. இது தொடர்பாகக் கிடைக்கும் தகவல்கள்.
1. வருடத்தில் 'புலைப்பேடி' நடைபெறும் காலத்தில், உயர்சாதிப்
பெண் ஒருத்தி, இருட்டிய பின் தனியாக வீட்டிற்கு வெளியே வரும்போது புலையர், பறையர், மண்ணார் சாதியைச் சார்ந்த ஒருவர் 'கண்டுவிட்டேன்' என்று கூவினாலோ, தொட்டாலோ, சிறுகல்லை அல்லது குச்சியை அவள் மீது எறிந்தாலோ அவள் தீட்டுப்பட்டவள் ஆகிவிடுகிறாள். அவளை மீண்டும் வீட்டில் ஏற்றுக்கொள்வதில்லை. அவனுடன் அவள் சென்று வாழ்க்கை நடத்த வேண்டும்.
2. மீறி அவள் வீட்டினுள் அனுமதிக்கப்பட்டால் அக்குடும்பமே சாதி விலக்கிற்கு ஆளாகும்.
இச்சமூகப் பழக்கத்தைப் பதிவு செய்திருப்பவர்கள் ஷேக் சையனூதின், டுவார்ட் பார்போசா ஆகியோர் ஆவர். எனவே 16-ம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே இது வழக்கில் இருந்தது எனத் தெளிவாகிறது.