book

சாணக்கிய நீதி அரசியலும் அந்தரங்கமும்

₹125+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சந்தியா நடராஜன்
பதிப்பகம் :சந்தியா பதிப்பகம்
Publisher :Sandhya Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789387499331
Add to Cart

கீழ்க்கண்ட ரகசியங்களை யாரிடமும் கூறாமல் இருப்பதே அறிவுடைமை; தான் இழந்த செல்வம், தனது தனிப்பட்ட மன வருத்தங்கள், இல்லத்தில் ஏற்பட்ட கெட்ட நிகழ்வுகள், வெறுக்கக்கூடிய ஒருவனது இழிவான பேச்சுகள், தனக்கு ஏற்பட்ட அவமானங்கள் - இவை மறைத்து வைக்கப்பட வேண்டும். இந்த விஷயங்களைச் சகித்துக்கொள்; மௌனித்திரு.

சத்தியம் எனது தாய்; ஞானம் எனது தந்தை; தருமம் எனது சகோதரன்; கருணை எனது தோழன்; அமைதி எனது மனைவி; மன்னித்தல் எனது மகன்; இந்த ஆறு நற்பண்புகளே எனது உறவுகள்.

மனைவியின் பிரிவு, நெருங்கிய உறவினரின் இகழ்ச்சி, கடன் சுமை, கொடுங்கோலனிடம் பணிபுரிதல், வறுமையில் நண்பனின் பாராமுகம் ஆகிய இவை ஐந்தும் தீயின்றியே தேகத்தைப் பொசுக்கும்.

பிராமணன் ஒரு விருட்சம். அது அழிவற்றது. என்றைக்குமானது. வேதங்கள் அந்த விருட்சத்தின் கிளைகள்; பிரார்த்தனைகள் அதன் வேர்கள்; மதச் சடங்குகள் அதன் இலைகள்; வேர்களின் வலிமையில் மரம் தழைத்திருக்கிறது. எனவே வேர்கள் வலுவிழந்தால் மரம் பட்டுப்போகும். எனவே வேர்கள் பாதுகாக்கப் படவேண்டும்.