
கருத்தியல் பற்றிய சிந்தனைகள்
₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பேராசிரியர் சே. கோச்சடை, தேவி பிரசாத் சட்டோபாத்யாயா
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :204
பதிப்பு :1
Published on :2018
ISBN :9789388050869
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cartதத்துவ அறிஞர் தேவி பிரசாத் சட்டோபாத்யாயாவுக்கு தமிழில் அறிமுகம் தேவையில்லை. இந்தியத் தத்துவ மரபுகள் குறித்த பல்வேறு ஆய்வு நூல்களை எழுதியவர்.
தமிழில் வந்த கீழ்க்கண்ட இவரது மொழிபெயர்ப்பு நூல்கள் பெரும் கவனிப்பைப் பெற்றவை. இவற்றைத் தவிர சில குறுநூற்களும் தமிழில் வெளியாகியுள்ளன.
பண்டைய இந்திய மருத்துவ (ஆயுர்வேதம்) மெய்யியல் குறித்த ஆய்வை இரண்டு கட்டுரைகள் செய்கின்றன. இதர கட்டுரைகளும் அறிஞரின் பிற ஆய்வுகளையும் அனைவரும் வாசிக்க வேண்டும்.
“பண்டைய இந்தியாவிலிருந்த பல துறைகளிலும் முற்றிலும் மதச்சார்பின்றியும் – அப்போது தவிர்க்க இயலாதபடி தொடக்கநிலையில் (rudimentary form) இருந்தாலும் கூட – நவீனக் கண்ணோட்டத்தில் இயற்கை அறிவியலின் தொடக்கங்களுக்கு நம்பிக்கை வைக்கக் கூடியதுமாக இருந்த ஒரேயொரு துறை மருத்துவம் அல்லது ஆயுர்வேதம்”, (பக்.150, பண்டைய இந்தியாவில் அறிவியல், மெய்யியல், சமூகம்) என்ற தெளிவிலிருந்து இக்கட்டுரை தொடங்குகிறது.
“சமய நோய்தீர் கலையிலிருந்து பகுத்தறிவுக்குட்பட்ட நோய்தீர் நோய்தீர் கலையாக நினைவில் நிற்கும் அளவுக்கு முன்னோக்கி அடையெடுத்து வைத்தது”, (பக்.151) இதன் சாதனையாகும்.
