book

வயதாவதா வளர்ச்சியா?

₹228₹240 (5% off)+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஓஷோ, தியான் சித்தார்த்
பதிப்பகம் :கண்ணதாசன் பதிப்பகம்
Publisher :Kannadhasan Pathippagam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :230
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788184028461
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

நான் “வாழ்க்கை” என்று சொல்லும் போது எதைக் குறிப்பிடுகிறேன் என நாம் புரிந்துகொள்ள வேண்டும், அது வெறுமனே வயதாகிக் ‘கொண்டிருப்பது அல்ல, அது வளர்ச்சியடைவது. இவை இரண்டும் வேறுபட்ட விஷயங்கள். வயது ஏறுவது மிருகங்களுக்கும் நடக்கும். வளர்ச்சியடைவது மனித இனத்திற்கு நிகழக்கூடிய ஒன்று. சிலர் மட்டுமே அதற்கு தகுதியடைகின்றனர். வளர்ச்சியடைவது என்றால் ஒவ்வொரு கணமும் வாழ்க்கையை ஆழமாக வாழ்ந்து பார்ப்பது; அது மரணத்தை நோக்கி செல்வதல்ல. வாழ்க்கையினுள் ஆழமாக செல்லும் அளவிற்கு உனக்குள் உள்ள அழியாத் தன்மையை உன்னால் புரிந்து கொள்ள முடியும். நீ மரணத்தை கடந்து செல்வாய்; எதுவும் இறப்பதில்லை, எதுவும் அழிவதில்லை – எதுவும் அழிய முடியாது – மரணம் என்பது உடையை மாற்றுவது போல, குடியிருக்கும் வீட்டை மாற்றுவது போல், வடிவத்தை மாற்றுவது என்பதை நீ பார்க்கும் ஒரு நேரம் வரும். வளர்ச்சியடைதல் என்பதை அறிய ஒரு மரத்தை கவனி. அது உயரமாக வளர வேண்டுமெனில் அதன் வேர்கள் எந்த அளவு பூமியில் கீழே சென்றிருக்க வேண்டும் – அங்கே ஒரு சமநிலை இருக்கிறது – வேர்கள் ஆழமாகச் செல்லும் அளவு மரம் மேலே உயரமாக வளரும். சிறிய வேர்களையுடைய மரம் நூற்றி ஐம்பது அடி உயரம் வளர முடியாது. அவைகளால் அந்த அளவு பெரிய மரத்தை தாங்கி பிடிக்க முடியாது. வாழ்க்கையில் வளர்ச்சி என்பது நீ உனக்குள் எந்த அளவு ஆழமாகச் சென்றுள்ளாய் என்பதை குறிப்பது தான் உனது வேர்கள் அங்குதான் உள்ளன. -ஓஷோ