book

பகவத்கீதை பிணைப்பு கோபம் தற்பெருமை காமம் பேராசை

₹45+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். கோவிந்தாச்சாரி
பதிப்பகம் :லியோ புக் பப்ளிஷர்ஸ்
Publisher :Lio Book Publishers
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :128
பதிப்பு :10
Published on :2009
குறிச்சொற்கள் :தெய்வம், கோயில், பொக்கிஷம், வழிமுறைகள், கருத்து, சரித்திரம்
Add to Cart

மனிதனை நிறை மனிதன் ஆக்குவது கீதையின் கோட்பாடாகும். உறுதியான உடலும் உயர்ந்த உள்ளமும் தெளிந்த அறிவும் நிறை நிலைக்கு இன்றியமையாத உறுப்புகளாகும். பேராற்றல் படைத்திருப்பது முதல் கோட்பாடு. ஒழுக்கம், ஆற்றலில் அடங்கிவிடுகிறது. நலத்தைச் செய்யவும் செய்விக்கவும், ஆற்றல் உடையவனுக்கே முடியும். அடுத்த கோட்பாடாவது அன்பு, உயிர்கள் அனைத்துக்கும் அது பொதுவானது. அன்பைத் தூய அன்பாக மாற்றியமைப்பது பக்தியோகத்தின் நோக்கமாகும். தூய அன்பினின்று இனிமையாவும் தோன்றும். எல்லாவற்றையும் ஒன்று படுத்துவது தூய அன்பு, உலகில் உள்ள உயிர்கள் அனைத்தும் தூய அன்பு படைத்திருப்பவனுக்குச் சொந்தமாய் விடுகின்றன. இனி,அறிவு மூன்றாவது கோட்பாடு ஆகும். பட்டப்பகலை உண்டுபெண்ணும் ஞாயிறுபோன்றது அறிவு. அனைத்தையும் அது விளக்குகிறது.