book

தமிழர் வீரம்

₹55+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ரா.பி. சேதுப்பிள்ளை
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :85
பதிப்பு :1
Published on :2020
ISBN :9788123439556
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

தமிழ்மக்கள் உலகின் தொன்மைக்குடியினர். பல நாடுகளில் நாகரிகமே தோன்றாத நிலையில் தமிழன் சங்கம் வைத்துத் தமிழ் வளர்த்தவன். சேர சோழ பாண்டியர் என மூன்று பிரிவினராக இருந்தாலும் வீரத்திலும் ஈரத்திலும் சிறந்தவராய் இருந்தனர். மூவேந்தரும் இமயத்தில் வில், புலி, மீன் கொடிகளைப் பதித்தவர்கள். பிற நாடுகளோடு வாணிக உறவும், தூதுவர் நிலை உறவும் கொண்டிருந்த அறிவார்ந்த சமுதாயமாக இருந்தனர். அவர்களுடைய விளையாட்டில் கூட வீரம் இருந்தது. களம் கண்டு வீரம் விளைத்தவருக்கு வீரக்கல் நட்டனர். தமிழரின் செயல்கள் அனைத்தும் வீரத்தின் அடிப்படையில் தான் நடைபெற்றன என்பதை விளக்குவதே இந்தத் தமிழர் வீரம் என்னும் நூல். தமிழர்களின் பண்டைய இயல்புகளை அறிந்து கொள்ள இந்த நூல் மிகவும் பயன்படும்.
ஆய்வறிஞர், வழக்கறிஞர், பேராசிரியர் ரா.பி. சேதுபிள்ளை அவர்கள் இந்த நூலை எழுதியுள்ளார். சட்டம் பயின்ற தமிழ்ப் பேராசிரியர் சொல்லாராய்ச்சியில் வல்லவர். கவிதை நடையில் எதுகை மோனை அமைத்துப் பேசும் சிறந்த மேடைப் பேச்சாளர். நாட்டுடைமையாக்கப்பட்ட நூல்வரிசையில் இந்த நூலை எமது பதிப்பகம் வெளியிட்டு மகிழ்கிறது.