book

அறுவடை

₹115+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஆர். சண்முகசுந்தரம்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :குறுநாவல்
பக்கங்கள் :71
பதிப்பு :1
Published on :2019
ISBN :9788194395652
குறிச்சொற்கள் :2020 வெளியீடுகள்
Add to Cart

"அறுவடை" ஆர்.ஷண்முகசுந்தரம் எழுத்து வாழ்க்கையில் மிக முக்கியமான செவ்வியல் குறுநாவல். இத்துடன் அவரின் எழுத்து வாழ்க்கையையும் படைப்புகளையும் தொகுத்துத் தந்துள்ள "ஆர். ஷண்முகசுந்தரம் - வாழ்வும் படைப்பும்" என்கிற கட்டுரை இணைப்பு ஒரு விரிவான பார்வையை வாசகர்களுக்கு முன்வைக்கிறது.

"அறுவடை" ஒன்பது அத்தியாயங்கள் மட்டுமே கொண்ட இந்தக் குறுநாவல் 1960 இல் எழுதப்பட்டது. கல்யாண ஆசையில் பெண் தேடும் சின்னப்ப முதலியாரின் வயது எழுபது. பணத்துக்காகவே அலைந்துகொண்டிருக்கும் நாச்சிமுத்து, அவனுடைய செல்ல மகள் தேவானை, அவளுடைய காதலன் சுப்ரமணியன், சின்னப்ப முதலியாருக்கும் தன் மகனுக்குமாகச் சேர்த்து மணமகள்களைத் தேடும் கருப்பண முதலியார் என்று வெகு சில கதாபாத்திரங்கள்தான் இந்த குறுநாவலில் வருகின்றனர். நாவலின் வெற்றியே அதன் முடிவுதான்; யாருமே எதிர்பார்க்காத ஒரு காவிய முடிவு அது! சண்முகசுந்தரத்தின் எழுத்து வெற்றியும் அதில்தான் அடங்கியுள்ளது. .

ஆர். ஷண்முகசுந்தரம் (1917 - 1977) புதினத்துறையில் மட்டுமின்றி சிறுகதை, நாடகம், கவிதை, மொழியெர்ப்பு தளங்களிலும் படைப்புகளைத் தந்துள்ளார். மொத்தம் 21 நாவல்கள் எழுதியுள்ளார். அவற்றுள் முக்கியமானவை நாகம்மாள், பூவும் பிஞ்சும், பனித்துளி, அறுவடை, சட்டிசுட்டது ஆகியவை. எண்ணம் போல் வாழ்வு, விரிந்த மலர் ஆகியவை குறுநாவல்கள். தமிழ் நாவல்களில் மட்டுமல்ல; இந்திய நாவல்களிலும் சண்முகசுந்தரத்தின் ‘நாகம்மாள்’ நாவலுக்கு குறிப்பிடவேண்டிய ஒரு முக்கியத்துவம் உண்டு..