book

பிராப்ளம்ஸ்கி விடுதி

Problemski Hostel

₹150+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :லதா அருணாச்சலம், டிமிட்ரி வெர்ஹல்ஸ்ட்
பதிப்பகம் :காலச்சுவடு பதிப்பகம்
Publisher :Kalachuvadu Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :127
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789355230515
Add to Cart

பெல்ஜிய நாட்டின் ஆரென்டக் நகரில் அமைந்துள்ள புகலிடம் தேடுவோர் மையத்தில் தங்கியிருக்கும் புலம்பெயர்ந்தவர்களின் வாழ்வில் நிகழும் சம்பவங்களைக் கதைக்கருவாகக் கொண்டது இந்நாவல். அகதிகள் புகலிட தேசத்தில் உயிர்த் தரித்திருப்பதற்கான விழைவை மட்டுமே கொண்டவர்கள் என்று பொதுப்புத்தியில் படிந்துபோயிருக்கும் சித்திரத்தை உடைக்கிறது இப்படைப்பு. சூழலால் ஏற்படும் புறநெருக்கடி அவர்களது இயல்பான உணர்வுகளையும் தனித்த குணாம்சங்களையும் விருப்பங்களையும் நம்பிக்கைகளையும் வேரறுத்து விடுவதில்லை. அவர்கள் ஒவ்வொருவரின் வாழ்க்கையும் ஒவ்வொரு வகையானது என்பதை இந்நாவல் உணர்த்துகிறது. அகதிகளின் வாழ்க்கையைப் பெரும்பாலும் கழிவிரக்கத்திற்குரியதாகவே சித்தரிக்கும் மற்ற படைப்புகளிலிருந்து மாறுபட்டு இந்நாவல் எள்ளலும் உற்சாகமுமாக உயிர்த் துடிப்புடன் நகர்கிறது. நாவலாசிரியர் தனது பகடிநடையினூடே புகலிட வாழ்வின் நிச்சயமின்மையின் அவலத்தை நுட்பமாகக் கூறியிருப்பது வாசகர்களின் மனதில் ஆழ்ந்த தாக்கத்தை உருவாக்குகிறது. நாவல் என்ற வகைமையில் மட்டுமல்ல, படைப்பு என்ற நிலையிலும் பிராப்ளம்ஸ்கி விடுதி முற்றிலும் ஒரு புதிய முயற்சி.