book

கபிலர்

Kabilar

₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந.மு. வேங்கடசாமி நாட்டார்
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :வரலாறு
பக்கங்கள் :184
பதிப்பு :7
Published on :2019
Add to Cart

கடைச்சங்க காலத்தின் இடைக்காலம். குறிப்பிட்டுச் சொன்னால் கி.மு. 400-ல் இருந்து கி.பி. 200 -க்கு உட்பட்ட காலம் என்கிறார்கள் ஆய்வாளர்கள். பறம்பு மலையைத் தலைமையிடமாகக் கொண்டு பாரி என்ற குறுநில மன்னன் ஆட்சி செய்து வந்தான். அவன் வேளிர் குலத்தில் பிறந்ததால் வேள்பாரி என்றும் அழைக்கப்பட்டான். சேரர்களையும் சோழர்களையும் நடுநடுங்க வைத்த மன்னன் இந்த வேள்பாரி. பறம்பு மலை, இன்றைய நாளில் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள திருப்பத்தூரை அடுத்து சிங்கம்புணரியில் உள்ளது. வெறும் 300 ஊர்களை உள்ளடக்கிய பறம்பு நாட்டின் மன்னன் மூவேந்தர்களுக்கு ஒப்பாகக் கூறப்பட்ட காரணம், போர்த் திறம் மட்டுமன்று கொடைத்திறமும்தான். `முல்லைக்குத் தேர் கொடுத்த பாரி' என்று கடையெழு வள்ளல்களில் ஒருவன். தன்னலமற்ற கொடைக்கு மட்டுமல்ல; ஒப்புயர்வற்ற நட்பிற்கும் உதாரணமாகத் திகழ்ந்தவன் பாரி. சங்கப் புலவர் கபிலர் பாரியின் மிக நெருங்கிய நண்பர். இவர் பாண்டிய நாட்டில் உள்ள திருவாதவூரில் பிறந்தவர். சங்கத்தமிழ் பாடல்களில் கபிலரின் பங்கு அளப்பரியது. குறிப்பாகக் குறிஞ்சித் திணையில் எண்ணற்ற பாடல்களைப் பாடியுள்ளார். மூவேந்தர்களும் பொறாமை கொள்ளும் அளவிற்குப் பாரியின் புகழைப் பாடி வந்தார் கபிலர்.