book

மண்மலர்

₹165+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சாண்டில்யன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :நாவல்
பக்கங்கள் :375
பதிப்பு :9
Published on :2017
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List

வாளின் நுனியில் ஆடையை நீட்டிய வளையல் கரம் மெல்லியதாகவும், நீண்டும், மிக அழகாகவும் இருந்ததை கவனித்த ரவிசந்த், “இந்த கைக்கு உடையவள் அப்சரசாகத்தான் இருக்கவேண்டும்; நிச்சயமாக மனிதவர்க்கத்தைச் சேர்ந்தவளாக இருக்க முடியாது” என்று நினைத்தான். சித்திரம் தீட்டுவதில் வல்லவனான அவன், தனது தோல்பைக்குள் இருந்த ஓவியக் கருவிகளை எடுக்க முடியுமானால் அந்தக் கையை வைத்துக் கொண்டே அவள் சித்திரத்தைத் தீட்ட முடியும் என்று எண்ணினான். அனால், அப்படி சித்திரம் தீட்டுவதை அவளோ, அவளை அழைத்து வந்திருக்கும் வீரனோ விரும்ப மாட்டார்கள் என்ற சிந்தனையால் அந்த எண்ணத்தை கைவிட்டு, அந்த அழகிய கரத்தின் மீதிருந்த பார்வையை உடலைத் துவட்டிவிட்டு, ஆடையை அணியத் தொடங்கிய வீரன் மீதும், அவன் புரவி மீதும் செலுத்தினான்.
அந்த வீரனின் ஆடையில் படாடோபம் ஏதும் இல்லை. மிக எளிய ஆடையாயிருந்ததன்றி இரண்டொரு இடங்களில் கிழிந்தும் இருந்தது. அவன் வலது கையில் ஒரு இரும்பு வளையத்தை அணிந்திருந்தான். அவன் காதையும் ஒரு இரும்பு வளையமே அலங்கரித்தது. உடைகளை அணிந்தபோது அவன் உடலை நெளித்த சமயங்களில் அவன் திண்மையான சதைப் பகுதிகள் அதிகமாக அசையாமல் கெட்டிப்பட்டு நின்றிருந்ததைக் கண்ட ரவிசந்த், அந்த மனிதன் உடல் இரும்புதான் என்பதை நிர்ணயித்துக் கொண்டான். தவிர செக்கச் செவேலென்ற அந்த உடலில் காணப்பட்ட பல தழும்புகளில் இருந்து அவன் பல போர்களில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்பதையும் அபாயம் அவனுக்கு சர்வசாதாரணம் என்பதையும் புரிந்து கொண்டான்.