book

சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும்

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :காசிவில்லவன்
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :150
பதிப்பு :1
Published on :2011
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

'வ.சுப்பையாவின் வாழ்வும் வழித்தடமும்' என்ற இந்த நூல் அனைவரும் படிக்க வேண்டிய ஒரு வரலாற்றுப் பெட்டகம். மக்கள் தலைவர் சுப்பையா அவர்களோடு பல ஆண்டுகாலம் நெருங்கிப் பழகியவன் என்ற முறையில் அந்த வரலாற்றுப் பெட்டகத்தை திறக்கும் முயற்சியில் ஒரு சிறு பங்கைத்தான் இந்த நூல் வழியே செய்திருக்கிறேன்.
வாழ்ந்த தலைமுறை, வாழும் தலைமுறைக்கு வரலாற்றை எடுத்துச் செல்லவும், சொல்லவும் வேண்டும். அதை வ.சு. செய்தார். அதைத் தொடர்ந்து செய்ய வேண்டிய பொறுப்பும் கடமையும் நமக்குண்டு என்பதாலே இந்நூல் வெளிவரலாயிற்று. இதில் அன்றாட வாழ்வில் நான் சுப்பையாவைக் கண்டவிதமாகக் காட்ட முயன்றிருக்கிறேன். வ,சுப்பையா வெறும் வாய்ப்பேச்சு வீரர் அல்லர்வாழ்ந்து காட்டிய வாய்மையாளர். சந்தர்ப்பவாதியல்ல ; சத்தான அரசியலுக்கு வித்தாகத் திகழ்ந்தவர். அவரிடம் தலைமறைவு வாழ்க்கை இருந்ததே தவிர, திரைமறைவு வாழ்க்கை இருந்ததில்லை . அவர் தன் இதயக் கதவைப் போலவே இல்லக் கதவையும் எல்லோருக்காகவும் திறந்து வைத்தவர். அவரிடம் காரிய சித்தி இருந்தது. மாற்றாரையும் மனங்கொள்ளச் செய்யும் மகத்துவம் இருந்தது. எதிரியை எதிர்கொண்ட விதத்திலும் அவரிடமிருந்த அரசியல் நாகரிகம், பெருந்தன்மை , அசாத்திய துணிச்சல் வெளிப்பட்டது. அதனால் சுப்பையாவின் வீடு மட்டுமல்ல, சுப்பையாவே இன்று மக்கள் சொத்தாகி மாநிலம் முழுவதும் கொண்டாடும் வகையில் அவரது வாழ்க்கை உயர்ந்து மிளிர்கிறது.