book

ஆறுமாதக் கடுங்காவல்

₹80+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைஞர் மு. கருணாநிதி
பதிப்பகம் :பாரதி பதிப்பகம்
Publisher :Bharathi Pathippagam
புத்தக வகை :அரசியல்
பக்கங்கள் :160
பதிப்பு :6
Published on :2006
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Out of Stock
Add to Alert List


ஜூன் 15ஆம் நாள் காலையில் சென்னையிலிருந்து திருச் சி நோக்கிப் புறப்பட்ட ஆகாய விமானம் என்னையும், தோழர் முல்லை சத்தியத்தையும் தூக்கிக் கொண்டு பறந்தது. தேவையான, வழக்கமான வேகத்தில் விமானம் பறந்து சென்றாலுங்கூட காற்றை யும் முகில்களையும் அளவுக்கு மீறிய வேகத்துடன் அது கிழித்துச் செல்வதாகவே நாங்கள் எண்ணினோம். உண்மையில் அந்தப் பறக் கும் இயந்திரத்தில் அவ்வளவு வேகமில்லை. எங்களின் மனோவே கந்தான் அப்படியிருந்தது. என்றுமில்லாத புத்துணர்ச்சி, தோளிலே தினவு, உள்ளமெல்லாம் உவகைக் கூத்து. காரணம் என்ன?
கல்லக்குடியிலே களம். அதற்கு நான் படைத்தலைவன். அந்த இன்பச்சேதி கேட்டு என்னுடன் தொடர்ந்த சத்தி. இருவர் இதயமும் அந்நிலையை அடைய இதை விட வேறு காரணம் என்ன தேவை. வீதிக்கு வீதி பல வீட்டுப் புலித் தமிழர் வில்லேந்தி வாழ்ந்தனர் என்று நமது புறநானூறு பேசுகிறது. மலர் தூவிய மஞ் சத்திலே இருப்பார்களாம்; போர் முரசின் ஒலி கிளம்புமாம்கடைசி முத்தமாயிருப்பினும் இருக்கும் எனக் களிப்புடன் கூறி - கண்ணீர் நிறைந்த காதலியரின் கன்னங்களிலே அன்பைப் பதித்து விட்டு மழவர்கள் தோள் தட்டி ஓடுவார்களாம். எஞ்சியுள்ள தமிழரின் வீரக் கவிதைகள் அந்த தித்திப்பான செய்திகளை நமக்கு சொல்லித்தான் வைத்திருக்கின்றன. அவ்வழி வந்தோர்- போர் தவிர புனிதமான முறை எதையும் கண்டு வழிக்குவர மறுக்கும் பொல்லாதவர்களை எதிர்த்து முரசு கொட்டுக என தலைவனிடமி ருந்து உத்தரவு கிடைத்துவிட்டது எனக்கேட்டு - அந்த உத்தரவை முத்தமிட்டு-களம் நோக்கி முரசு கொட்டச் செல்கிறார்கள் என்றால் ஏன் உவகை கிளம்பாது! உற்சாகம் மோதாது! உல்லாசப் பண் எழும்பாது! ''சூடேறிச் சுழன்றோடும் ரத்த ஓட்டத்திலே-முறுக் கேறி நிற்கும் நரம்புகளிலே-வீங்கிய மலைத்தோள்களிலே-தம்பி மார்களின் ஆற்றல் நிறைந்தயுத்த முறைகளிலே-தங்களுக்கு நம்பிக் கையில்லையா அண்ணா ?" என்று கேட்டுப் பெற்ற வரம் அல்