book

மேடைப்பேச்சு

₹260+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தா. பாண்டியன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :204
பதிப்பு :2
Published on :2019
ISBN :9788123432687
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

இந்த உலகத்திலேயே பாவப்பட்ட ஒரு சிலரைத்தவிர மற்றவர்களை எல்லாம் கேளுங்கள். உலகிலேயே மிகவும் ஈசியான வேலை பேசுவதுதான் என்பார்கள். . ஆனால் அப்படிச்சொல்பவர்களை கொஞ்சம் மேடை ஏறி பேசச் சொல்லுங்கள். பார்க்கலாம். அவர்கள் வண்டவாளம் தண்டவாளம் ஏறிவிடும். பேச்சுக்களில் மிக எளிதானதும், சுவாரசியமானதும், உலகத்தில் பெரும்பாலான மக்கள் விரும்புவதும் வெட்டிப்பேச்சு அல்லது வம்புப்பேச்சுதான்.
பேச்சுக்களில் மிக மிக கஷ்டமானது மேடைப் பேச்சுதான். உலகிலேயே அதிகம்பேர் சாவை விட அதிகமாக பயப்படுவதில் முதல் இடம் மேடைப்பேச்சுக்கு, அடுத்த இடம்தான் சாவுக்கு. (Public speaking is the #1 fear of the average person. #2 is death.
This means that at a funeral, more people would rather be in the casket than doing the eulogy- Jerry Seinfeld)
மரணமடைந்தவர்களப்பற்றி பேசச் சொன்னால் பலர், பேசுவதைவிட அந்தப் பெட்டியின் உள் இருக்கும் சவமாக இருப்பதையே விரும்புவர் என்கிறார் அவர்.
அது மாத்திரம் இல்லை. நாம் பிறந்த நாளில் இருந்து, விடாமல் 24x 7 வேலை செய்து வரும் நம் மூளை, நாம் பொது மேடையில் வந்து பேச நிற்கும்போது ஏனோ வேலை செய்வதை நிறுத்திவிடுகிறது். (George Jessel) . என்னைப் பொறுத்த வரையில் இது தவிர நாம் ஒரு வேலைக்கு இண்டர்வ்யூவுக்குப்போகும் போதும், பரீட்சை ஹாலுக்குள் நுழைந்த உடனேயும் இதே கதைதான். என்ன சொல்கிறீர்கள்?
உங்களுக்குப்பிடிக்காத உங்கள் ஆபீசரை தண்டிக்க நினைத்தால் ஒரு மீட்டிங் ஏற்பாடு செய்து அவரை தலைமை உரையை வழங்கச்சொல்லுங்கள். அதைவிட சிறப்பாக நீங்கள் அவரைப் பழி வாங்கிவிட முடியாது. ஆனால் சில சமயம் அவர் பேசும் பேச்சு உங்களுக்குத் தண்டனையாக ஆகவும் வாய்ப்பு இருக்கிறது. எனவே இந்த விஷயத்தில் உஷாராகவே இருங்கள்.