book

சகல ஐஸ்வர்யங்களும் அருளும் அஷ்டலக்ஷ்மி

₹40+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பி.எல். முத்துக்குமரன்
பதிப்பகம் :காமதேனு நிலையம்
Publisher :Kamadhenu Nilayam
புத்தக வகை :ஆன்மீகம்
பக்கங்கள் :80
பதிப்பு :1
Published on :2019
குறிச்சொற்கள் :2019 வெளியீடுகள்
Add to Cart

முன் ஒரு காலத்தில் தேவர்கள் அமுதம் பெற விரும்பித் திருப்பாற்கடலைக் கடைந்தனர். அப்பொழுது முதலில் காமதேனு உண்டாயிற்று. அதனைக் கண்ட தேவர்கள். மிகவும் மகிழ்ச்சி அடைந்தனர். அதன்பின் இனிய மது உண்டாயிற்று. பின்னர் நறுமணத்தினால் தேவ மாதர்களைப் பெரிதும் வியப்புறச் செய்த பாரிஜாத விருக்ஷம் (பவழ மல்லிகை மரம்) தோன்றியது. அதன் பின் அழகான உருவமும், உயாந்த குணங்களும் ஒருங்கே அமையப்பெற்ற அப்ஸரஸ் பெண்கள் தோன்றினர். பின்னர். அழகோடு அமுதக் கிரணங்களும் வாய்ந்த சந்திரன் உண்டானான். அந்தச் சந்திரனைச் சிவபெருமான் அன்போடு ஏற்றுத் தம்முடைய சிரசில் அணரிந்து கொண்டார். அப்பால், வெண்மை நிற ஆடை அணிந்து கையில் கமண்டலம் நிறைய அமுதத்தைத் தாங்கித் தன்வந்தரி பகவான் தோன்றினார். அந்த அமுதத்தைக் கண்டவுடன தேவர்களும், தானவர்களும் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர்,
பின்னர் தனது பேரொளியினால் பத்துத் திசைகளையும் பிரகாசிக்குமாறு செய்பவளும், அழகு மிக்க தாமரை மலரில் அமர்ந்து விளங்குபவளுமாகிய ஸ்ரீலகமி தேவி (திருமகள்) அந்தத் திருப்பாற் கடலிலிருந்து தோன்றவானாள. கூடிமி தேவியைக் கண்ட தேவர்கள் யாவரும் களிப்பும் வியப்பும் கொண்டவர்களாகி முனிவர் குழாத்துடன் கூடி, பரீளாக்கும் என்னும் வேத மந்திரங்களால் துதித்துப் போற்றினர்.