book

அம்புப் படுக்கை

₹180+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுனில் கிருஷ்ணன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :152
பதிப்பு :1
Published on :2017
ISBN :9789392876196
குறிச்சொற்கள் :2018 வெளியீடுகள்
Add to Cart

அம்புப் படுக்கை என் இத்தொகுதிக்குப் பெயரிடவும் தெளிவான காரணங்கள் ஏதுமில்லை. எனது 'அம்புப் படுக்கை' கதையுள் பீஷ்மர் ஒரு பாத்திரம் அல்ல. எனினும் இக்கதை அவரை நினைவூட்டக்கூடும். பீஷ்மர் காலத்தின்முன் தன் துயர் நீங்க அமைதியுடன் வேண்டிக் கிடக்கிறார். போதும் போதுமெனக் கதறி அரற்றவில்லை. துயரத்திலிருந்தும் கொண்டாட்டத்திலிருந்தும் சம அளவில் பற்றற்று இருப்பவராக பிஷ்மர் எனக்கு தோன்றவில்லை. வாழ்வின் மீது பெரும் விழைவும், வாஞ்சையும் ஒருபக்கம் நம்மை இருத்தி வைக்கின்றன. நம் பிடிப்பை ஒவ்வொரு விரலாக நெகிழ்த்தி வாழ்வைக் கைவிடச்செய்ய வதைக்கும் ஆற்றல்கள் மறு எல்லையில் நம்மை வற்புறுத்துகின்றன. இவற்றில் ஒன்றைத் தேர்வு செய்யத் தயங்கி, இயன்றவரை ஒத்திப் போடுபவராக, வலியில் வதங்கி வாழ்வின் நினைவுகளை மீட்டியபடி, தனது கேள்விகளுக்கு விடை தேட முனைபவராக பீஷ்மர் இருக்கிறார் எனத் தோன்றுகிறது. இக்கதை மாந்தர்களைப் போல்.