
மரணமின்மை எனும் மானுடக்கனவு
₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :சுனில் கிருஷ்ணன்
பதிப்பகம் :யாவரும் பதிப்பகம்
Publisher :Yaavarum Publishers
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :175
பதிப்பு :1
Published on :2022
ISBN :9789392876271
Add to Cartகுறைந்தது ஐந்தாறு தலைமுறைகளாகச் சித்த மருத்துவம் பார்த்துவரும் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் குடும்பத்திறுகுள் சித்த மருத்துவம் குடும்பத்தில் பிறந்தவன் நான். எங்கள் குடும்பத்திற்குள் சித்த மருத்துவம் எப்போது, எப்படி வந்தது என்பதே எனக்கு இன்று சுவாரசியமான ஆராய்ச்சியாக இருக்கும். இளவயதில் அரசு சித்தமருத்துவராக எங்கள் பகுதியில் புகழோடு இருந்த தந்தையை இழந்து விட்டிருந்ததாலும், வெற்றுடலுடன் நோயாளிகளைப் பார்க்கும் என் தாத்தாவின் அலுமினிய மருந்து பெட்டியைத் தூக்கிக்கொண்டு அவருடன் சென்ற வகையில் சில மருந்துவ அனுவங்களைப் பால்யத்திலேயே பெற்றிருக்கிறேன். அவர் நாடி நோக்குவதில் விற்பன்னர். மரண குறிகளைக் கச்சிதமாக அறிந்தவர் எனும் பெயரும் உண்டு. கண்கூடாகச் சில அசாதரண தருணங்களுக்குச் சாட்சியாக இருந்தபோதிலும் கூட அவருடைய முறைமைகளின் மீது நம்பிக்கை ஏற்பட்டதில்லை. 'அம்புப் படுக்கை' கதையில் அவரது சித்தரம் உள்ளது.
