book

இஸ்லாமிய ஆன்மிகம் – நமக்குள் எழுப்பும் கேள்விகளும் பதில்களும்

₹130+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உஸ்தாத் அபூ நசீபா எம்.எஃப். அலீ
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
Publisher :Kugaivaasigal Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :155
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

இந்த உலகில் ஒவ்வொருவரின் ஆன்மாவிலும் சில கேள்விகள் எப்போதும் இருக்கும். அவற்றுக்குச் சரியான பதில்கள் கிடைத்தால்தான் ஆன்மத் திருப்தி அடைய முடியும். அவற்றில் முதன்மை கேள்வி இறைவனைப் பற்றியவை. இறைவன் உண்டா, இல்லையா? இறைவன் எங்கிருக்கிறான்? அவன் எப்படிப்பட்டவன்? அவனைப் பார்க்க முடியுமா? இப்படிப் பல. அடுத்த வகை, மரணத்தைச் சுற்றி எழக்கூடிய கேள்விகள். மரணம் என்பது என்ன? அதற்குப் பின் என்னவாகிறோம்? மறுவுலகம், மறுஜென்மம் என்பவை உண்டா? சொர்க்கம், நரகம் உண்டா? இப்படிப் பல. இவை மட்டுமின்றி, வேதம், இறைத்தூதர்கள், வணக்கவழிபாடுகள் என்று பல விசயங்களைப் பற்றியும் நமது ஆன்மாவுக்குள் கேள்விகள் எழுகின்றன. அனைத்திற்கும் இஸ்லாமிய விடைகளை வழங்குகின்ற கட்டுரைகளே இந்நூலில் உள்ளன. இவற்றை வாசிப்பவர் இஸ்லாமிய ஆன்மிகத்தின் உயிரோட்டத்தை, அதன் பிறப்பிடத்தை, ஒளியை அறிந்துகொள்ள முடியும்.