book

இஸ்லாமியக் கொள்கைகள்

₹275+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பௌலானா எஸ்.எஸ். முஹம்மது அப்துல் காதிர் சாஹிப் பாகவி (ரஹ்)
பதிப்பகம் :யுனிவர்ஸல் பப்ளிஷர்ஸ்
Publisher :Universal Publishers
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :382
பதிப்பு :2
Published on :2021
Add to Cart

கொள்கைக்கும் கொள்கைக்கு ஏற்ற செய்கைக்கும் இஸ்லாம் மார்க்கம் முக்கியத்துவம் அளிக்கிறது. கொள்கை இல்லாமல் செய்கை இருப்பதோ, செய்கை இல்லாமல் கொள்கை மட்டும் இருப்பதோ நன்மை பயக்காது. இதனை அடிப்படையாகக் கொண்டே ‘மூமின்’, ‘முஸ்லிம்’ என்ற இரு சொற்கள் இஸ்லாமியக் கரந்தங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. ஒருவர் பரிபூரண விசுவாசி என்று தன்னைக் கூறிக் கொள்ளலாம். அவரிடம் சன்மார்க்க விசுவாசம் இருக்கிறது என்பதை அவருடைய சன்மார்க்க கிரியைகளைக் கடைபிடிப்பதைப் பார்த்துத் தான் மற்றவர்கள் நம்ப முடியும். செய்கை இல்லா விசுவாசம் மட்டும் உள்ளவர் மூமின் என்றுதான் கருதப்படுவார். அவரை முஸ்லிம் என்று ஷரீயத் சட்டம் அங்கீகரிக்காது. சன்மார்க்க விசுவாசம் இல்லாமல் சன்மார்க்க் கிரியைகளை மட்டும் கடைபிடிப்பவர் ஷரியத் சட்டம் மூமின் என்று ஒப்புக் கொள்ளாது. ஆகவே இம்மை மறுமை இரண்டிலும் இஸ்லாமின் பலனை அடைய விரும்புபவர்கள் மூமினாவும் இருக்க வேண்டும் என்பதை ஆரம்ப காலத்தில் இருந்தே பெரியோர்களான இமாம்கள் பொது மக்களுக்கு உணர்த்தி இருக்கின்றனர். இதனை நன்கு புரிந்து கொள்வதற்காக ஃபிக்ஹு (மார்க்கச் சட்டம்), அக்காயித் (கொள்கைகள்) என்ற இருவகைச் சட்டங்களை தனித்தனியாக பிரித்து எழுதியுள்ளனர். மிக விரிவான நூல்கள் அரபி, உருது, பார்சி ஆகிய மொழிகளில் எழுதப்பட்டு இருக்கின்றன அவற்றில் ஒன்று. ‘ஆகாயிதுல் இஸ்லாம்’ எனும் நூலாகும் இதனை டில்லி அல்லாமா முகமது அப்துல் ஹக் ஹக்கானீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் உருது மொழியில் எழுதியுள்ளார்கள். முஸ்லிம் இளைஞர்களி டத்தில் நாத்திகமும் காதியானித்துவமும் வஹ்ஹாபியத்தும் ஷிர்க்கும் பரவி விடக் கூடாது என்பதை கருத்தில் கொண்டு 1939 ஆம் ஆண்டே மரியாதைக்குரிய மௌலானா எஸ். எஸ். முகமது அப்துல் காதர் சாகிப் பாகவி அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. கையெழுத்துப் பிரதியாக இருந்த அந்நூல் இப்பொழுது நூல்வடிவம் பெற்று தங்கள் கைகளில் தவழ்கிறது.