book

நான்கு இமாம்கள் – வாழ்க்கையும் கொள்கையும்

₹90+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உஸ்தாத் அபூ நசீபா, எம்.எஃப். அலீ
பதிப்பகம் :குகைவாசிகள் பதிப்பகம்
Publisher :Kugaivaasigal Pathippagam
புத்தக வகை :சமயம்
பக்கங்கள் :136
பதிப்பு :1
Published on :2021
Add to Cart

கல்வி, இறையச்சம், வழிபாடு, நற்குணம், தியாகம் அனைத்திலும் நம்மை மலைக்க வைக்கும் நான்கு இமயங்களின் இறைநம்பிக்கையை நம் முன் கண்முன் நிறுத்தும் வரலாற்று உண்மைகளின் பொக்கிஷம் இந்நூல். இமாம் அபூஹனீஃபா (ரஹ்) இராக்கிலும், இமாம் மாலிக் (ரஹ்) மதீனாவிலும், இமாம் ஷாஃபிஈ (ரஹ்) ஷாமிலும், இமாம் அஹ்மது (ரஹ்) பக்தாதிலும் பிறந்தார்கள். ஆனால் எல்லா தேசங்களில் வாழும் எல்லா முஸ்லிம்களின் உள்ளங்களிலும் வாழ்கிறார்கள். ஆயிரம் வருடங்களுக்கும் மேலாக இஸ்லாமிய வரலாறு அவர்களை வாழ்த்துகிறது. இனியும் வாழ்த்தும். அவர்கள் இஸ்லாமியக் கொள்கைகளை அதன் உண்மையுருவில் கட்டிக்காத்தார்கள்; குர்ஆன் நபிவழியிலிருந்து நுட்பமான சட்டங்களைப் போதித்தார்கள்; புதுமையான நம்பிக்கைகளையும் வழிபாடுகளையும் இஸ்லாமின் பெயரால் பரப்ப முனைந்த எல்லா வழிகேடர்களையும் அம்பலப்படுத்தினார்கள். அவர்களின் கலப்படமற்ற கொள்கைகளை வரலாற்று ஆவணங்களின் ஆதாரங்களுடன் விவரிப்பதுதான் இந்நூலின் நோக்கம்.