book

சான்ஸே இல்ல bro

₹135+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.சி. பெருமாள்
பதிப்பகம் :குமுதம் புத்தகம் வெளியீடு
Publisher :kumudam puthagam velieedu
புத்தக வகை :யோகா
பக்கங்கள் :104
பதிப்பு :1
Published on :2015
Add to Cart

அனிருத் படிக்கும்போதே ஒழுக்கமான ஸ்டூடனட். அப்பவே எங்களுக்கு தெரியும். பிற்காலத்துல இவன் பெரிய ஆளா வருவான்னு. நம்ம ஸ்டூடண்ட் இன்னைக்கு நம்ம கல்லூரிக்கே பெருமை சேர்த்திருக்கார்'னு ஏதேதோ புகழ்ந்து தள்ளினாங்க. பேராசிரியர்கள் பேசின பிறகு நான் மைக்கைப் பிடித்தேன்.
"இவங்கலாம் புகழுறதப் போல நான் ஒழுக்கமான ஸ்டூடண்ட் இல்ல. நான் படிச்சு முடிக்குற வரைக்கும் எந்த புரொபசரும் என்னைய க்ளாஸ் ரூம்லேயே பார்த்திருக்க முடியாது. ஏன்னா? சேர்ந்த நாள்ல இருந்து கல்ச்சுரல் டீம்கூடதான் என் முழு நேரத்தையும் செலவிட்டிருக்கேன். ஏதோ மேடைக்காக என்னைப் புகழணுமேன்னு புரொபசர்ஸ் பொய் சொல்றாங்க. அவங்க பேசினதை நம்பிடாதீங்க'னு நான் சொன்னதும் அரங்கமே ஆச்சர்யப்பட்டது. புரொபசர் எல்லோருக்கும் பெரிய ஷாக்! என்னால் அவங்க முன்னாடி நடிக்க முடியல.
நான் ப்ளஸ் ஒன் படிக்ம்போதே ஒரு டிவி நடத்தின ஊலலலா போட்டியில் கலந்துகிட்டேன். இந்த போட்டியில கலந்துக்க எந்த வயது வரம்பும் கிடையாதுன்னு போட்டிருந்தாங்க. என் வயதைவிட சீனியர்ஸும் கலந்துகிட்டாங்க ஒவ்வொரு ஸ்கூலா போட்டி நடந்தது. ஃபைனல் போட்டி ஏவிஎம் ஸ்டூடியோவுல ஷூட் பண்ணாங்க. அந்தப் போட்டியில எங்க ஸ்கூல் டீம்தான் வின் பண்ணது. ஜெயிச்ச டீமுக்கு பரிசு கொடுக்க சிறப்பு விருந்தினரா ஏ.ஆர்.ரஹ்மான் வந்திருந்தார். அந்தப் போட்டியில எனக்கு மட்டும் பெஸ்ட் இன்ஸ்ட்ருமெண்ட் பரிசு கிடைச்சுது. இசைப் புயல் கையால பரிசு வாங்கினப்ப பெரிய சந்தோஷம். இதனால பசங்க மத்தியில எனக்கு பெரிய பாப்புலாரிட்டி உருவாகியிருந்ததால், லயோலாவுக்குள் என்ட்ரி ஆகும்போதே பசங்க என்னை ரவுண்ட் அப் பண்ணிட்டாங்க. பி.காம்., அட்மிஷன் போட்ட மறுநிமிடமே டான்ஸ், பாட்டு, மியூசிக்னு திரியுற பசங்ககூட செட்டில் ஆகிட்டேன். அதுக்கப்புறம் ஒரு நாளும் கிளாஸ் ரூம் பக்கம் நான் தலை வச்சதே இல்லை. என்கிட்ட இருந்த ஒரே கெட்ட பழக்கம் இதுதான்.