book

இரவு

₹140+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :கலைச்செல்வி
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :சிறுகதைகள்
பக்கங்கள் :180
பதிப்பு :1
Published on :2016
ISBN :9788123431802
Add to Cart

சிறுகதைகள் ஏதாவது ஒரு புள்ளியில்தான் மையம் கொண்டு விரிகின்றன. விரிதலின் கோணம் அருகி ஓர் அரிய தருணத்தில் சட்டென்று அப்புள்ளியிலிருந்து விலகி விடுகின்றன. பிறகு அதனை ஏந்திக்கொள்வது வாசக மனம்தான். மனிதர்களுள் உலாவும் கதைகள்தான் எத்தனை விதமானவை.அதன் வடிவும் ,போக்கும் எந்த நீட்சிக்குள் அடக்கவியலாதது. அகத்தின் ஆழமானது பல விசித்திரமான நிலைகளை தனக்குள் புதைத்து வைத்திருக்கிறது.படைப்பாளிகளின் தேடலில் சில ரகசியங்கள் கட்டவிழ்க்கப்பட்டாலும் மேலும் மேலும் மர்மப்புன்னகையுடன் அது நழுவி கொண்டுதானிருக்கிறது. சொல்லித் தீராத விஷயங்களிலும் எட்டு பிடிக்கவியலாத மனோரகசியங்களிலும்  சிலவற்றை எனக்கு தெரிந்தவரை உளவரிந்து சில சிறுகதைளாக்கிருக்கிறேன்.