book

பூஞ்சிறகு

₹85+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :வாசுகி ஜெயரத்னம்
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :91
பதிப்பு :1
Published on :2015
ISBN :9789383670758
Add to Cart

திரையரங்கின் சுவர் ஒட்டிய கடைசி இருக்கையில் நான். பக்கத்தில் புஷ்பா. வரிசையாய் இரு தம்பிகள். மணமான அவள் அக்கா, அவள் கணவன்.
"பாபு.. நீயும் வா"
அழைப்பை ஏற்று உடன் வந்தவனுக்கு புஷ்பா பக்கத்தில் அமர்வாள் என்ற எதிர்பார்ப்பு இல்லை.
எல்லோரும் திரையில் பிம்பங்களின் பொய் சோகத்தில் ஆந்திருந்தபோது என் மீது மெத்தென்ற விரல்கள் படிந்தன.
திடுக்கிட்டுத் திரும்பினேன். புஷ்பாவின் கவனமும் திரையில்தான். விரல்கள் மட்டும் சுதந்திரம் பெற்று என் கை விரல்களுடன் கூட்டணி தேடின.
ஜுரம் வந்தபோது கூட இத்தனை நடுக்கம் வந்ததில்லை. தயக்கம், பயம், ஆசை என்று உணர்ச்சிக் கலவையின் மத்தியில் சுத்தமாய் படம் என்ன என்பதே புரிபடாமல் போனது.
இடைவேளை வெளிச்சத்தில் என்னைப் பார்த்துச் சிரித்தாள்.