தெய்வப் புலவர் திருவள்ளுவர்
₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ஔவை. சு. துரைசாமிப் பிள்ளை
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :131
பதிப்பு :1
Published on :2015
Out of StockAdd to Alert List
தமிழனின்
தனிப்பெருஞ் சொத்தாகவும் செங்கோல் சீர்மையினைச் செப்புவதாகவும் அமைந்த
நூல் திருக்குறள். அதனை எழுதியவர் திருவள்ளுவர். "வள்ளுவன் தன்னை
உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்பார் மகாகவி பாரதியார்.
மனிதகுலம் - தனிப்பெருங் கருணையுடையதாக வாழ்வாங்கு வாழும் - வளம்
பெறுவதற்கான அறங்களின் தொகுப்பாக உள்ளது. அறத்துப்பால், பொருட்பால்,
காமத்துப்பால் என மூன்று பால்களையும் 133 அதிகாரங்களையும் அதிகாரத்திற்குப்
பத்து பாடல்கள் வீதம் 1330 குறட்பாக்களையும் உடையது.
திருவள்ளுவரைப் பற்றிய உண்மை வரலாறு அறியப்படாத நிலையில் பலரும் பல்வேறு கதைகள் மூலம் திருக்குறளையும் திருவள்ளுவரையும் பரப்ப முயன்றுள்ளனர். எனினும் திருவள்ளுவரைப் பற்றி அறிந்து கொள்ள அகச்சான்றாகக் கிடைத்திருப்பது அவர் எழுதியுள்ள திருக்குறள் ஒன்றேயாம். அதன் பெருமை கருதியே அதனைப்பாராட்டிப் பலர் எழுதிய பாடல்களின் தொகுப்பே திருவள்ளுவ மாலை என வழங்கப்படுகிறது வேறு எந்தத் தமிழ் நூல்களுக்கும் கிடைத்திடாத பெருமை திருக்குறளுக்கு உண்டு. திருக்குறளுக்குப் பின்னர் எழுந்த நூல்கள் அனைத்தும் திருக்குறள் கருத்துகளை எடுத்தாண்டிருப்பதை அனைவரும் அறிவர்.