மணிமேகலை
₹250+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :இலக்கியம்
பக்கங்கள் :448
பதிப்பு :1
Add to Cartஎழில் தவழும் இளங்கன்னியாகத் தமிழணங்கைக் கண்டு, அவள் இடையிலே தவழும் மேகலையாக மணிமேகலைக் காப்பியத்தையும், அவள் காலிலே கொஞ்சும் சிலம்பாகச் சிலப்பதிகாரத்தையும் புனைந்து கூறிப்பெருமிதம் அடைவது தமிழறிஞர் மரபு. இந்த மரபு, அந்த இரு காப்பியங்களின் தனித்த இலக்கியச் செழுமையினையும், வரலாற்றுச் சிறப்பினையும், பொருள் இனிமையினையும் எவர்க்கும் எடுத்துக்காட்டுவதாகும். மாதவியின் மகளான மணிமேகலை, உலக இன்ப நாட்டத்தினை அறவே வெறுத்தப் புத்த பிக்குணியாகித் தன் 'பவத்திறம் அறுக' வென நோற்றுச் சிறந்தனைச் செந்தமிழ் நயஞ்செறிய முப்பது பாக்களிலே சிறப்புற அமைத்துத் தந்த தமிழ்ச் சான்றோருக்குத் தமிழகம் என்றென்றும் கடமைப்பட்டிருக்கிறது.