book

இணையற்ற சாதனையாளர்கள் மூன்றாம் பாகம்

₹100+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முக்தா. சீனிவாசன்
பதிப்பகம் :கங்கை புத்தக நிலையம்
Publisher :Gangai Puthaga Nilayam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :332
பதிப்பு :1
Published on :2002
Add to Cart

தொடக்கத்தில் திண்ணைப் பள்ளிக்கூடத்தில் பயின்று எழுத்தறிவு பெற்றார்.சிறு வயது முதற்கொண்டு இவரது தமிழ் ஆர்வம் மிகையாக இருந்தது.பண்டிதமணி கதிரேசன் செட்டியார்,மேலைசிவபுரியில் பழனியப்ப செட்டியார் ஆகியோரின் உறவு இவரது தமிழ் ஆர்வத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது.அண்ணாமலைப்  பல்கலைக் கழகப் புலவர் வகுப்பில் சேர்ந்து முதன் மாணவனாக இவர் தேர்ச்சி பெற்றார் என்றால் அதற்குக் காரணம் கடினமான உழைப்பு மட்டுமே.இந்தப் படிப்பு முடிந்ததால் அடுத்து ஆய்வு மாணவன்----இதைத் தொடர்ந்து அந்தப் பல்கலைக் கழகத்திலேயே தமிழ் விரிவுரையாளர் பதவி----அந்தப் பணியில் தொடர்ந்து  ஏழாண்டுகள் இருந்தார்.பணி செய்துகொண்டே தனது படிப்பையும் தொடர்ந்தார்.பி.ஒ.எல்.,எம்.ஏ., பட்டங்களைப்பெற்றார்.---ஆய்வுப்பணி தொடர்ந்தது.---பிஎச்.டி.,பட்டம் இவரை வந்தடைந்தது.

                           காரைக்குடி அழகப்பர் கல்லூரி இவரை அழைத்தது.அங்கு தமிழ்ப் பேராசிரியராக  இருபது ஆண்டுகள் பணியாற்றினார்.இந்தக் காலத்தில் பல அரிய தமிழ் நூல்களைப் படைத்தார்.