book

மனிதனின் மகத்தான சக்திகள்

₹160+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :புலியூர்க் கேசிகன்
பதிப்பகம் :மங்கை வெளியீடு
Publisher :Mangai Veliyeedu
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :304
பதிப்பு :1
Published on :2016
Add to Cart

மனிதன் என்பவன் வெறும் எலும்பினாலும் சதையினாலும் அமைந்தவன் என்பது வெளிப்படையான தோற்றமாகும். ஆனால் அவன் பிறந்தான், வாழ்ந்தான், மறைந்தான் என்று பேசத்தக்கவன் அல்லன். அவன் பிறந்தான், வளர்ந்தான், சாதித்தான், வாழ்ந்தான், பலரும் நினைக்கும் படி மறைந்தான் என்று வரலாறு படைக்க வேண்டும். அதற்கு அவனுடைய உடலில் எப்போதும் இணைகோடுகளாய்க் கனன்று கொண்டிருக்கும் உள் சக்திகள் அவனுக்கு ஆற்றலைத் தருகின்றன. சிந்தனை உணர்வுகளைத் தருகின்றன. அதன்மூலம் உயரத்தின் உச்சியில் அமரச் செய்கின்றன. மின் சக்தியின் இயல்பையும் பயன் பாடுகளையும் நாம் அறிவோம். அதுபோல காந்த சக்தியின் இயல்பையும் அதன் பயன்பாடுகளையும் நாம் அறிவோம். அவ்விரு சக்திகளும் நம் உடலிலும் உள்ளன என்பதை நாம் அறியவில்லை. அவற்றை முறையாக அறிந்து உரிய வகையில் செயல்படுத்திப் பயன்களையடையலாம். பேரும் புகழும் பெற்ற பெருமைக்குரியோராகத் திகழலாம். அந்த அற்புதத்தை விளக்க எழுந்த நூலே மனிதனின் மகத்தான சக்திகள். ஏற்கெனவே 1989இல் முதல் பதிப்பைக் கண்டுள்ளது. நாட்டுடைமை ஆக்கப்பட்ட அறிஞர்களின் நூல் வரிசையில் இந்நூலும் இப்பொழுது வெளிவந்துள்ளது.