book

பெண் கல்வி பெண் மானம், பெண்மதி மாலை

₹75+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :மாயூரம். வேதநாயகம் பிள்ளை
பதிப்பகம் :சாரதா பதிப்பகம்
Publisher :Saratha Pathippagam
புத்தக வகை :கல்வி
பக்கங்கள் :137
பதிப்பு :1
Published on :2012
Add to Cart

கிறித்தவச் சமய நிறுவனங்கள், இந்திய அரசாங்கம் போன்றவற்றின் மேற்சொன்ன சில முயற்சிகளைத் தவிர பெண்கள் கல்வி கற்பதற்கான முன்னெடுப்புகள் பெரிய அளவில் இல்லாத காலகட்டத்தில் பெண் கல்வி பற்றி உரக்கச் சொன்னவர் வேதநாயகம் பிள்ளை. கிறித்தவச் சமயப் பின்னணி, ஆங்கிலேய அரசாங்கத்தில் அவர் ஆற்றிய பணி, ஆங்கிலக் கல்வி வாயிலாக உலக இலக்கியப் போக்குகளை அவதானிக்கும் வாய்ப்பு போன்றவை அவரிடம் புதிய சிந்தனைகளையும் புதிய முயற்சிகளையும் உருவாக்கின. ‘பிரதாப முதலியார் சரித்திரம்’ என்ற பெயரில் தமிழில் முதல் நாவல் எழுதும் முயற்சி அதன் விளைவே. அந்த நாவலிலேயே பல இடங்களில் பெண் கல்வியின் அவசியத்தையும் பெண்ணடிமைத் தனத்தை எதிர்த்தும் அவர் எழுதியிருக்கிறார்.‘இந்த தேசத்தில் பெண்களை அடிமைகளைப் போலவும் மிருகங்களைப் போலவும் நடத்துவது மிகவும் பரிதவிக்கத்தக்க விஷயமாயிருக்கிறது’