book

பாபாசாகேப் அம்பேத்கர் (ஒரு பன்முகப் பார்வை)

₹220+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :பதிப்பகத்தார்
பதிப்பகம் :தமிழ் திசை
Publisher :Tamil Thesai
புத்தக வகை :வாழ்க்கை வரலாறு
பக்கங்கள் :183
பதிப்பு :1
Published on :2022
Add to Cart

75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடும் இந்த தருணத்தில், நவீன இந்திய வரலாற்றை புரட்டும்போது அம்பேத்கரின் பெயர் இல்லாத அத்தியாயங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அவரது பங்களிப்புகள் அனைத்து தளங்களிலும் பரந்து விரிந்திருக்கின்றன. சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம், நீதி, ஜனநாயகம் ஆகிய விழுமியங்களின் மீது அவர் கட்டியெழுப்பிய அரசியலமைப்பு சட்டமே அனைத்து மக்களையும் மிகவும் மாண்புடன் வழிநடத்துகிறது. பிரதமர் நரேந்திர மோடி, “நான் பிரதமர் ஆனதற்கு அம்பேத்கரே காரணம்'' என சில ஆண்டுகளுக்கு முன் நன்றியுடன் நினைவுகூர்ந்தார். காங்கிரஸ், இடதுசாரி உட்பட பிற கட்சிகளின் தலைவர்களும் அம்பேத்கரை முன்வைத்து பேசுவதை அவ்வப்போது காண முடிகிறது. மத்திய மாநில அரசுகளும் அரசியல் கட்சிகளும் அம்பேத்கரின் பெயரில் நிறைய நலத் திட்டங்களையும், விழாக்களையும் அதிகளவில் முன்னெடுக்கின்றன.