book

சங்க இலக்கியத் தேனமுதம்

₹50+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் க. முருகேசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :தமிழ்மொழி
பக்கங்கள் :160
பதிப்பு :1
Published on :2008
Out of Stock
Add to Alert List

தமிழின் பெருமையைத் தரணியெங்கும் பறைசாற்று இலக்கியங்களாகக் காலங்கடந்து வாழ்வு பெற்றவை சங்க இலக்கியங்கள் கடந்து வந்த ஆண்டுகள் இரண்டாயிரம் ஆயினும், காலத்திற்கேற் தனித்தன்மையுடன் வெற்றி நடைபோடும் இலக்கியப் பரப்பு சங்க இலக்கியங்கள். உலக மக்கள் அனைவருக்கும் பொருந்தும் வகையில் சாதி, மத, இனங்கடந்து மக்களை ஒருமுகப்படுத்தும் உன்னத நோக்கு கொண்டவை சங்க இலக்கியங்கள். இத்தகு சீர்மிகு சிறப்பு வாய்ந்த சங்க இலக்கியத்தினை ஆய்வுக்களமாகக் கொண்டு பேராசிரியர் முனைவர் க.முருகேசன் அவர்கள் சங்க இலக்கியத் தேனமுதம் என்னு இந்நூலினைப் படைத்துள்ளார்.
இலக்கியத்தைப் படிக்கும் நபர்களில் சிலர் படித்துச் சுவைத்து தனக்குள்ளே மகிழ்வர். சிலர் படித்த இலக்கியத்தின் உயர்வுகள் அடுத்தவர்களோடு பகிர்ந்து கொள்வர். இன்னும் சிலர் படித்துணர்ந்த இன்பச் சுவையினை எழுதி நூலாக்கி வெளியிட்டு, இலக்கியப் பசியுடைய அனைவருக்கும் இனிய விருந்தாக்குவர். இந்நூலாசிரியர் மூன்றாம் வகையைச் சார்ந்தவர். தான் கற்றுணர்ந்த சங்க இலக்கியக் கருத்துக்கள் ஐந்து கட்டுரை வடிவங்களாக மாற்றி இந்நூலில் வலம் வரச் செய்கின்றார்.
சங்க இலக்கியச் சுவைஞர்களும், இளம் ஆய்வாளர்களும் கட்டாயம் படிக்க வேண்டிய சிந்தனைக் களஞ்சியம் இந்து நூலாசிரியரின் முயற்சி வளரட்டும், வெல்லட்டும்.