
பூம்புகார்ப் பொற்றொடி
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :முனைவர் க. முருகேசன்
பதிப்பகம் :நாம் தமிழர் பதிப்பகம்
Publisher :Naam Tamilar Pathippagam
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :144
பதிப்பு :1
Published on :2009
Add to Cart
பூம்புகார் என்றவுடன் கண்னாகியும் கோவலனுமே நினைவுக்கு வருவது இயல்பு, மாதவி என்பாளும் கற்புக்கடம் பூண்டு சிறந்து நின்ற பெருமையை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது இந்நூல்,
ஐந்து கட்டுரைகள் இந்நூலில் அடங்கியுள்ளன. அவற்றுள் மூன்று கட்டுரைகள் மாதவியைப் பற்றியன. கடைசி இரு கட்டுரைகள் மணிமேகலையின் சிறப்பு உரைப்பன, கலையின் இருப்பிடமாக மாதவி விளங்கியதையும், கோவலனும் கலை உள்ளம் கொண்டவனாக இருந்ததால் தான் இருவரும் இணைந்தனர் என்பதையும், மாதவி கோவலனிடம் நிலையான அன்பு வைத்திருந்த தன்மையையும் புலப்படுத்துகின்றது.
முதல் கட்டுரை. இரண்டாவதாக அமைந்துள்ள கட்டுரை 'இந்திர விழாவும் எழிலாள் மடல்களும்' என்பதாகும். இது இந்திர விழா நிகழ்ச்சியின் போது, கோவலனும் மாதவியும் பிரியும் நிலை உண்டானதை விளக்கி, மாதவி கோவலனுக்கு எழுதிய மடல்களைப் பற்றி விவரிப்பதாக அமைந்துள்ளது. 'பூம்புகார் பொற்றொடி' என்னும் மூன்றாவது கட்டுரை மாதவியின் குலம் குறித்தும் அவள் தூய நெறியில் வாழ்ந்த தன்மையைக் குறித்தும் ஆய்ந்து, மாதவி தீது இலாதவள் என்பதை விவரிக்கிறது. 'வாழ்வியல் விழுமியம் வழங்கிடும் மேகலை' என்னும் கட்டுரை மேகலையின் தவ வாழ்வையும் கொள்கையையும் எடுத்து உரைக்கின்றது. 'அறமருள் அணங்கு என்னும் இறுதிக் கட்டுரை மேகலையின் அறம் சார்ந்த செயல்களைக் காட்டுகின்றது. இவ்வாறு கணிகையர் குலத்தில் தோன்றினாலும் கற்புநிலை தவறாது வாழ்ந்த மங்கையர்களைப் பற்றிய இந்நூலை எழுதியவர் முனைவர் க. முருகேசன்.
