உரைகளும் உரையாசிரியர்களும்
₹60+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.சு. நடராசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :74
பதிப்பு :1
Published on :2013
ISBN :9788123424880
Add to Cartஒரு நூலின் கருத்தையோ பாட்டின் பொருளையோ காண்பதற்குப் பல அறிவுக்கூறுகள் வேண்டும். உரையாசிரியர்கள் மொழியியல், அறிவியல், உளவியல், சமூகவியல், வரலாற்றியல், சட்டவியல், நாட்டுப்புறவியல் எனப் பல்துற அறிவுக்கூறுகளைக் கொண்டிருந்தனராகக் காணப்படுகின்றனர். திறனாய்வின் கூறுகளும் பண்டைய உரையாசிரியர்களின் உரைகளில் காண்கிறோம். இது இன்ன காலத்துத் தோன்றிய நூல் என்ற கால அறிவும், இக்காலத்து இச் சொல்லுக்கு இப் பொருள் என்ற சொல்லறிவும், இன்ன காலத்து இருந்த பழக்க வழக்கங்கள் இவை என்ற சமுதாய அறிவும், இத்தொடர் ஓடிக்கிடக்கும் முறை இது என்ற நடையறிவும், இன்ன பிறவும் இருந்தால்தான் பொருளை முரணின்றிக் காண முடியும்.
உரையாசிரியர்களின் பணி பழைய நூல்களுக்கு உரை கண்டதோடு நின்றுவிடவில்லை. அவர்கள் பழைய நூல்களில் பிற்காலத்தவர் எழுதிச் சேர்த்த/திருத்திய பொருந்தாப் பாடல்களை/இடைச்செறுகல்களை ஆராய்ந்து நீக்கினர். ஏடு எழுதியவரால் நேர்ந்த பிழைகளையும் களைந்தனர். உரையாசிரியர்களின் துணை இல்லாவிடின் பழம்பெரும் நூல்களில் பொதிந்து கிடக்கும் கருத்து வளங்களை நாம் பெற முடியாமலேயே போய் இருக்கும்.
"உரையாசிரியர்கள் பண்டைத் தமிழ் நூல்களுக்குச் செய்த ஒரு பெருந்தொண்டு மூலச் செம்மையாகும்" என்பார் வ சு ப மாணிக்கம். உரைகள் தோன்றியிராவிட்டால் திருக்குறள் மூலம் பல மூலங்களாயிருக்கும் என ஆய்வாளர்கள் கருதுகின்றனர். இலக்கண நூல்களுக்கு உரை எழுதிய ஆசிரியர்கள் விளக்கங்களில் பொருள் தெளிவைத் தருகிறார்கள். குறள் போன்ற இலக்கிய நூல்களின் உரைகளிலோ பொருள் தெளிவோடு நயங்களும் பெருகிக் காணப்படுகின்றன.