book

சிலப்பதிகாரம் மறுவாசிப்பு

₹170+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :தி.சு. நடராசன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கட்டுரைகள்
பக்கங்கள் :196
பதிப்பு :1
Published on :2015
ISBN :9788123430270
Add to Cart

இக்கேள்விக்கான விடை மிக எளிது. ஏனென்றால் மறுவாசிப்பிற்கான வாயில்கள் நிரம்ப உடையது சிலப்பதிகாரம். தமிழ் நூல்களில் குறளும், இராமாயணமும், சிலம்பும் மறுவாசிப்பிற்கான வெளியை அதிகம் உடையது என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதிலும் குறிப்பாக சங்க இலக்கியங்களின் நீட்சி அதிகம் உடைய நூல் சிலப்பதிகாரம் ஆகும். சிலப்பதிகாரம், சங்க இலக்கியம் ஆகிய இரண்டுமே நாடகப்பாங்கு உடையவை. ஆனாலும் சிலம்பு நீண்ட கதையாடலாகவும், வலப்பக்கம் இடப்பக்கம் அதிகம் இல்லாத திட்ட வரையறையோடு கூடியது ஆகும். சிலம்பு வெறும் கதையல்ல; கருத்தமைவும், கனவுகளும் நிறைந்தது. இதன் மொழியும் மொழியின் பனுவலும் காலம் கடந்து உணர வேண்டியவை. பண்பாட்டுத் தளத்திலும், தேசிய நெருக்கடியிலும் செவ்வியல் இலக்கியங்களுக்குப் புதிய விளக்கங்கள் தவிர்க்க முடியாது என்பதாலும் மறுவாசிப்பு அவசியம் ஆகிறது. இவை இப்பனுவலின் ஆசிரியர் கூற்றாக அமைந்தவை. இந்த அடிப்படையில் நாம் நூலின் உள்நுழையுங்கால் நம்முன் எழும் அடுத்த வினா,