book

எளிய படவிளக்க எந்திரப் பொறியியல் தமிழ் - ஆங்கில அகராதி 3795 கலைச்சொற்கள்

₹300+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :உலோ. செந்தமிழ்க் கோதை
பதிப்பகம் :அறிவுப் பதிப்பகம்
Publisher :Arivu pathippagam
புத்தக வகை :பொது
பக்கங்கள் :248
பதிப்பு :1
Published on :2008
Add to Cart

இயந்திரவியல் (அல்லது இயந்திரப் பொறியியல்), ஒரு பொறியியலின் முக்கிய கிளைத்துறையாகும். மேலும் இது பழைமையான பொறியியல் துறைகளுள் ஒன்றாகும். கணிதம், பௌதீகக் கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்டு கருவிகளை அல்லது இயந்திரங்களை வடிவமைத்தல், தயாரித்தல், பராமரித்தல், பயன்படுத்துதல் போன்றவை இத்துறையின் கீழ் அடங்கும். இத்துறையில் பயிற்சி பெற்றவர்கள், விசையியல், இயக்கவியல், வெப்பவியக்கவியல் போன்ற கிளைத்துறைகளில் நல்ல தேர்ச்சி பெற்றவர்களாக இருப்பர். இத்துறையில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இயந்திரவியல் பொறியாளர் எனப்படுவர். இவர்கள் உற்பத்தி ஆலைகள், தொழில்துறை கருவிகள் மற்றும் இயந்திரங்கள், வெப்பமூட்டி மற்றும் குளிர்விக்கும் அமைப்புகள், போக்குவரத்து சாதனங்கள், விமானம், கப்பல்கள், மருத்துவ சாதனங்கள், ஆயுதங்கள் போன்ற பொருட்களின் வடிவமைப்பு உருவாக்கம் ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். இதற்கென அவர்கள் அடிப்படை கோட்பாடுகளோடு கணினி உதவி அமைப்புகள் மற்றும் பொருள் வாழ்நாள் சுழற்சி மேலாண்மை கொள்கைகள் ஆகியவற்றையும் பயன்படுத்துகின்றனர்.