book

காலடியில் நழுவுகிறது மணல்

₹65+ shipping fee*(Free shipping for orders above ₹500 within India)
எழுத்தாளர் :ந. நாகராஜன்
பதிப்பகம் :நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
Publisher :New century book house
புத்தக வகை :கவிதைகள்
பக்கங்கள் :75
பதிப்பு :1
Published on :2019
ISBN :9789388973694
Add to Cart

என்.எனது முதல் கவிதைத் தொகுப்பு 'சித்திரம் வரைந்த குழந்தை' 2012-ம் ஆண்டு சி.பி.ஹெச். நிறுவனத்தால் வெளியிடப்பட்டது. தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் நடத்தும் மாநில அளவிலான இலக்கியப் போட்டிகளில் அதே ஆண்டில் அத்தொகுப்பிற்கு விருதும் கிடைத்தது. தற்போது 2012-ம் ஆண்டுக்கு பின் எழுதப்பட்ட கவிதைகள் இத்தொகுப்பில் இடம்பெற்றுள்ளன. பொதுவாகவே நான் எப்போதும் கவிதை எழுத வேண்டும் என முனைந்து எதையும் எழுதியதில்லை. சமூகத்தில் வாழும் ஒரு ஜீவராசி என்ற முறையில் இச்சமூகத்தில் நிகழும் பல சம்பவங்கள் எல்லோரையும் போல எனக்குள்ளும் சில உணர்வு களைத் தூண்டும். மனதை தொந்தரவு செய்யும். ஆனாலும் அவை கவிதை களாக வடிவம் பெற்று விடுவதில்லை. அதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எனினும் சில நிகழ்வுகள் நம்மைத் தூங்கவிடாமல் செய்து விடுமல்லவா? அவ்வாறு இரண்டு இரவுகள் என்னைத் தூங்கவிடாமல் செய்தது ஆஷிபா என்ற எட்டு வயது சிறுமி பாலியல் வல்லுறவுக்கு ஆட்பட்ட நிகழ்வு. அதை எழுத்தில் கொட்டிய பிறகுதான் மனம் ஒரு நிலைபாட்டுக்கு வந்தது. இது போல் இத்தொகுப்பில் உள்ள பெரும்பாலான கவிதைகளுக்குப் பின்னால் என்னை எழுத உந்திய உணர்வுகள் உண்டு. அதையெல்லாம் சொன்னால் அவை கவிதையைத் தாண்டிய எனது உளறலாகக் கூட அமைந்துவிடலாம். எனினும் பல கவிதைகள் வாசிக்கும் போது வாசகர்களுக்கு எதையேனும் உணர்த்தும் என்ற நம்பிக்கை எனக்கு உண்டு. அது போதுமானது. ஒவ்வொருவரும் அவரவர் நிலையிலிருந்து கவிதைகளை அணுகுவதும் அனுபவிப்பதும் தான் சரியானதும் கூட. ஏனெனில் கவிஞன் எழுதும்போதிருக்கும் உணர்வு பிறிதொரு சந்தர்ப்பத்தில் அவனுக்கே ஏற்படாமல் போகலாம். ஆனால் வாசகர்களுக்கு அவர்கள் வாசிக்கும் சூழல் சார்ந்தோ , இடம் சார்ந்தோ , நேரம் சார்ந்தோ கவிதைகள் முற்றிலும் வேறான ஒரு உணர்வையும் தரக்கூடும். சில நேரங்களில் கவிஞன் உணர்ந்ததையும்கூட உணர்த்தலாம். எனவே நான் எப்போதும் எழுதிய கவிதைகளுக்குள் புகுந்து அவற்றை தொந்தரவு செய்வதில்லை.