வீட்டுக் காய்கறித் தோட்டமானது, வீட்டின் பின்புறத்தில் சமையலறையில் வீணாகும் நீரைக் கொண்டு பழங்கள் மற்றும் காய்கறிகளை வளர்த்தல் இது வீட்டுத் தோட்டம், ஊட்டச்சத்து தோட்டம், வீட்டுக் காய்கறித் தோட்டம், காய்கறித் தோட்டம் என அழைக்கப்படுகிறது. அதிக சூரிய ஒளி கிடைக்கும் வெட்ட வெளிப் பகுதி மற்றும் நீர் ஆதாரமுள்ள பகுதி, வீட்டுக் காய்கறித் தோட்டத்தின் அளவு மற்றும் வடிவமானது நிலத்தின் அளவு, வீட்டிலுள்ளவர்களின் எண்ணிக்கை மற்றும் தோட்டத்தை சீராக பராமரிக்க ஆகும் கால அளவைப் பொறுத்தது. ஐந்து பேர் கொண்ட குடும்பத்தினருக்கு, 5 சென்ட் (200 மீ2) இடமானது ஆண்டு முழுவதும் காய்கறிகள் கொடுக்க போதுமானது. செவ்வக வடிவ தோட்ட அமைவானது சதுர வடிவ (அ) நீள் பட்டை வடிவ தோட்டத்தை காட்டிலும் சிறந்ததாகும்.